Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

BCCI முன்னாள் தலைவரும், ஐபிஎல் கிரிக்கெட் முன்னாள் தலைவருமான ஸ்ரீனிவாசனின் மகன் அஷ்வின், தம்மை ஓரினச் சேர்க்கையாளர் என்று தெரிந்தும் ஒரு பெண்ணைத் திருமணம் செய்ய தந்தை ஸ்ரீனிவாசன் வற்புறுத்துகிறார் என்று பகிரங்க குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார்.

ஸ்ரீனிவாசனின் மகன் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு நேர்காணல் அளித்துள்ளார். அதில் தாம் கடந்த 10 வருடங்களாக ஓரினச் சேர்க்கையாளராக வாழ்ந்து வருவது தமது தந்தைக்குத் தெரியும் என்று கூறியுள்ளார். அப்படி தெரிந்து இருந்தும், தமது குடும்பத்துக்கு வாரிசு வேண்டும் என்றும், சொத்துக்களைப் பராமரிக்க வேண்டும் என்றும், கடந்த சில மாதங்களாக ஒரு பெண்ணைத் திருமணம் செய்துக்கொள்ள தம்மை வற்புறுத்தி வருகிறார் என்றும் அந்த பத்திரிகையின் நேர்காணலில் கூறியுள்ளார்.

இதற்காக அவர் தந்தை தமக்கு எழுதிய கடிதங்களையும் ஆதாரமாக சமர்ப்பித்துள்ளார் ஸ்ரீனிவாசனின் மகன். எனினும் இது குறித்து ஶ்ரீனிவாசனை ஊடகங்கள் அணுகிய போது, இது எனது தனிப்பட்ட குடும்ப விவகாரம். இதில் ஊடகங்கள் தலையிடுவதை விரும்பவில்லை என மறுத்துள்ளார்.

0 Responses to தம்மை ஓரினச் சேர்க்கையாளர் என்று தெரிந்தும் ஒரு பெண்ணைத் திருமணம் செய்ய வற்புறுத்தல்: ஸ்ரீனிவாசன் மகன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com