மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியும், பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் தாயாருமான ஷிராந்தி ராஜபக்ஷவை விசாரணைக்கு வருமாறு நிதி மோசடி தவிர்ப்பு பொலிஸ் பிரிவு விசாரணைக்கு அழைத்துள்ளது. இதனையடுத்து, ‘தனது தாயையும், சகோதரர்களையும் விட்டுவிடுங்கள்’ என்கிற ரீதியிலான கருத்தினை பேஸ்புக்கில் நாமல் ராஜபக்ஷ எழுதியிருந்தார்.
இதற்கு, முன்னாள் பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்கவின் மகன் சவீன் காரியவசம் பண்டாரநாயக்க பதிலுரை எழுதியுள்ளார். அதில், கடந்த இரண்டரை வருடங்களாக (கடந்த அரசாங்கத்தினால்) தமது தாய் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்ட போது தாம் எவ்வாறான உணர்வை கொண்டிருந்தேன் என்பதை நாமல் ராஜபக்ஷ தெரிந்து கொண்டாரா? என்று கேள்வியெழுப்பியுள்ளார்.
அத்தோடு, “எமது தாயும், தந்தையும், மாமாவும் அரசியல்வாதிகள் இல்லை. எனினும், உங்களுடைய ஆட்சியில் அவர்களை மானக்கேடாக நடத்திய போது நான் எந்தளவு கஷ்டப்பட்டிருப்பேன். ஊடகங்களில் அரசாங்கம் முற்றிலும் பொய்யான செய்திகளை வெளியிடும் போது நான் எவ்வளவு தாக்கத்துக்கு உள்ளாகியிருப்பேன். மற்றவர்களின் அனுதாபத்தை அல்லது ஆதரவை எதிர்பார்க்கும் முன்னர் நீங்கள் ஒரு சட்டத்தரணி என்ற அடிப்படையில் மறுபக்கத்தையும் கேளுங்கள்.” என்றும் சவீன் காரியவசம் பண்டாரநாயக்க தன்னுடைய பதிலுரையில் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to நாமல் ராஜபக்ஷவின் பேஸ்புக் இறைஞ்சலுக்கு, முன்னாள் பிரதம நீதியரசரின் மகன் பதிலடி!