இலங்கையின் ஆயுத மோதல்களின் போது இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச கண்காணிப்பின் கீழ் உள்நாட்டு விசாரணைகள் நீதியாக முன்னெடுக்கப்பட்டால், அதனை வரவேற்பதாகவும், வாழும் சாட்சியான தான் சாட்சியமளிப்பேன் என்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.
நேர்மையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டால், அது நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான அடிப்படையாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை அரசாங்கம் முன்னெடுக்கவுள்ள உள்நாட்டு விசாரணைகளில் கலந்து கொண்டு சாட்சியமளிக்கப் போவது தொடர்பில் ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும் போதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
“இறுதி மோதல்களின் போது இறந்த ஆன்மாக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். வாழும் சாட்சியான நான் வெறுமனே இருந்து மரணித்துப் போகாமல், உண்மையை சர்வதேசத்துக்கு வெளிக்கொணர்வதற்காக சாட்சியமளிப்பேன்” என்றுள்ளார்.
இறுதி மோதல்களின் இறுதி நாட்களில் தமிழீழ விடுதலைப் புலிகளின் சரணடைவு நடவடிக்கைகளின் தூதுவராக சந்திரநேரு சந்திரகாந்தன் செயற்பட்டிருந்தார். ஆனாலும், அந்த நடவடிக்கைகளில் இலங்கை அரசாங்கம் நம்பிக்கைத் துரோகம் செய்ததாக அவர் ஏற்கனவே குற்றஞ்சாட்டியிருந்தார்.

0 Responses to சர்வதேச கண்காணிப்பில் உள்நாட்டு விசாரணைகள் நீதியாக முன்னெடுக்கப்பட்டால் சாட்சியமளிப்பேன்: சந்திரநேரு சந்திரகாந்தன்