Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நாளை(07.05.2017) பிரித்தானியாவில் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் கிழக்கு ஹரோ பகுதியில் , உமா குமாரன் என்னும் ஈழத் தமிழ் பெண் லேபர் கட்சியூடாகப் போட்டியிடுகிறார். அவரை வெல்லவைப்பது என்பது தமிழர்கள் கைகளில் தான் உள்ளது. கடந்த 5 வருடங்களுக்கு முன்னர் நடந்த தேர்தலில் அப்பகுதியில் லேபர் கட்சி வெறும் 3,000 ஆயிரம் வாக்குகளால் தோல்வி கண்டது. ஆனால் கிழக்கு ஹரோ பகுதியில் மட்டும் சுமார் 4,000 தமிழர்கள் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் நாளை சிரமத்தை பாராது புறப்பட்டுச் சென்று வாக்களித்தால் , நிச்சயம் உமா குமரன் வெற்றியடைவார் என்று ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.  (இரவு 10.00 மணி வரை வாக்களிக்க முடியும்)

பிரித்தானியாப் பாராளுமன்றில் , யூதர்கள் MP யாக இருக்கிறார்கள். பல இந்தியர்கள் MP யாக இருக்கிறார்கள். ஆனால் இதுவரை எந்த ஒரு தமிழரும் பாராளுமன்ற உறுப்பினர் ஆனதே இல்லை. நாளை நடக்கும் தேர்தலில் உமா குமாரன் வெற்றிபெற்றால் , அது ஒரு சரித்திரமாக மாறும். மேலும் ஈழத் தமிழர் ஒருவர் பிரித்தானிய பாராளுமன்றம் சென்றால் , தமிழர்களது பல பிரச்சனைகளை அவர் அங்கே ஒலிக்கச் செய்வார். இதனூடாக எமது போராட்டத்திற்கு பெரும் வெற்றிகள் கிட்ட வாய்ப்புகள் உள்ளது.

அதுபோக கிழக்கு ஹரோ பகுதியில் வாழும் தமிழ் மக்கள் , தமது MP யோடு தமிழில் உரையாடி உங்கள் கோரிக்கைகளை முன்வைக்கலாம். சமூகப் பிரச்சனைகள். சமூகத் தேவைகள் ,கோவில் கட்ட , மத வழிபாட்டு இடங்களை கவுன்சில் ஒதுக்கி தரவேண்டும் என்பது போன்ற பல கோரிக்கைகளை உங்கள் MP யிடம் நீங்கள் எடுத்துச் செல்ல முடியும். அவர் ஒரு தமிழராக இருப்பின் உங்கள் தேவைகளை அறிந்தவராக நிச்சயம் இருப்பார்.

எனவே நாளை நடைபெறவுள்ள தேர்தலில் அனைத்து தமிழர்களும் வாக்களியுங்கள். அதுவே எமது போராட்டத்தை அரசியல் ரீதியாக நகர்த்த பெரிதும் உதவியாக இருக்கும்.

0 Responses to லண்டனில் நாளை தமிழர் வரலாறு எழுதப்படுமா?

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com