Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மார் 24 ஆம் திகதி பிரெஞ்சு அல்ப்ஸ் மலைச்சாரலில் கிறீன்விங்க்ஸ் விமானத்தை மோதச் செய்து 150 உயிர்கள் பலியாகக் காரணமாக இருந்த துணைப் பைலட்டான அன்ட்ரெயாஸ் லுபிட்ஸ் குறித்த விபத்தை எப்படி ஏற்படுத்துவது எப்படி என்பது குறித்து ஏற்கனவே ஒத்திகை பார்த்ததாகத் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

இன்று புதன்கிழமை பிரெஞ்சு விமான விபத்து விசாரணையாளர் குழுவான BEA ஆல் குறித்த விமானத்தின் கருப்புப் பெட்டி மற்றும் காக்பிட் ஒலிப் பதிவுக் கருவி என்பவற்றில் இருந்து சேகரிக்கப் பட்ட தகவல்களை ஆய்வு செய்து வெளியிடப் பட்ட இடைக்கால அறிக்கையிலேயே இத்தகவல் வெளியிடப் பட்டுள்ளது. அதாவது ஜேர்மனியில் இருந்து ஸ்பெயின் நோக்கிச் சென்று கொண்டிருந்த குறித்த கிறீன்விங்ஸ் விமானத்தை லுபிட்ஸ் தனியாக இயக்கிய சமயங்களில் 3 செக்கன்களுக்குள் 100 அடி நீள வித்தியாசத்தில் பல தடவைகள் விமானத்தை ஏற்றி இறக்கியுள்ளதுடன் 49 000 அடியில் இருந்து 35 00 அடிக்கும் இறக்கியுள்ளார். இச்சமயத்தில் விமானத்தின் கேப்டன் லுபிட்ஸைத் தனியாக விட்டு விட்டு 5 நிமிடங்களுக்கும் குறைந்த நேரத்தில் திரும்பிய போதிலும் அதற்குள் தனது திட்டத்தைச் செயற்படுத்துவதற்காக லுபிட்ஸ் விமானத்தை இயக்கும் பகுதியில் நுழைவதற்கான கதவைத் தாழிட்டு விட்டார்.

கிறீன்விங்க்ஸ் விமானத்தை வேண்டுமென்றே அல்ப்ஸ் மலையில் மோதச் செய்த லுபிட்ஸ் நீண்ட காலமாக மனவழுத்த வியாதியால் பாதிக்கப் பட்டிருந்தவர் எனப் பின்னர் நடத்தப் பட்ட விசாரணைகளில் தெரிய வந்திருந்தது. மேலும் இந்த மோசமான விமான விபத்துக்குப் பின்னர் உலகளாவிய ரீதியில் பைலட்டுக்களுக்கு உள்ள மனநலத் தர மதிப்பீட்டை எவ்வாறு கண்காணிப்பது என்பது தொடர்பில் விவாதங்கள் ஏற்பட்டு விழிப்புணர்வு நடவடிக்கைகள் திட்டமிடப் பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

0 Responses to கிறீன்விங்ஸ் விமான விபத்தை ஏற்படுத்திய விமானி அதனை ஏற்கனவே ஒத்திகை பார்த்ததாகத் தகவல்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com