Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சென்னை ஆர் கே நகர் எனப்படும் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதிக்கான இடைத் தேர்தலுக்கு பணிக்குழுவை நியமித்து பெயர்ப் பட்டியலை வெளியிட்டுள்ளது அதிமுக.

ஆர் கே நகருக்கு வருகிற ஜூன் மாதம் 27ம் திகதி இடைத் தேர்தல் நடைப்பெறுகிறது. இதற்கான வேட்பு மனுத் தாக்கல் 3ம் திகதி தொடங்க உள்ள நிலையில், அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா வருகிற 5ம் திகதி வேட்பு மனுத் தாக்கல் செய்வார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் அதிமுகவுக்கான தேர்தல் பணிக்குழு பட்டியல் இன்று வெளியாகியுள்ளது. இந்தக் குழுவில் ஒ.பன்னீர் செல்வம், மதுசூதனன், வளர்மதி, கோகுல இந்திரா உள்ளிட்ட 7 பேர் தலைமயில் குழுவில் மொத்தம் 50 பேர் இடம் பெற்றுள்ளனர். இந்த 50 பேரில் தம்பி துரையும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 Responses to ஆர் கே நகர் இடைத் தேர்தல் பணிக்குழு நியமனம்: அதிமுக

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com