Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மோதல் காலங்களில் காணாமற்போகச் செய்யப்பட்டோர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக ஐக்கிய நாடுகளின் செயற்பாட்டுக்குழு வரும் ஒகஸ்ட் மாதம் 03ஆம் திகதி இலங்கை வருகின்றது.

ஐக்கிய நாடுகளின் செயற்பாட்டுக்குழு, 30 நாடுகளில் காணமற்போகச் செய்யப்பட்ட 400 சம்பவங்கள் தொடர்பாக ஆராய்ந்து வருகின்றது.

இலங்கையில் இடம்பெற்ற காணமற்போகச் செய்யப்பட்ட சம்பவங்கள் குறித்து தொடர்பில் விசாரிக்க ஒகஸ்ட் 03 ஆம் திகதி இலங்கைக்கு வரும் இக்குழு, 12 ஆம் திகதி வரை தங்கியிருக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தக் காலப்பகுதிக்குள் தனிப்பட்ட வழக்குகள் தொடர்பிலும், மக்கள் பிரதிநிதிகள், காணமற்போகச் செய்யப்பட்டோரின் உறவினர், சிவில் சமூகப் பிரதிநிதிகளை இந்தக்குழு சந்தித்து பேசவுள்ளது.

ஐக்கிய நாடுகளின் செயற்பாட்டுக்குழு இலங்கைக்கு வருகை தருவதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அப்போதைய அரசாங்கம் ஒப்புதல் அளிக்கவில்லை. ஆனால், இந்தக் குழுவினர் ஓகஸ்ட் மாதத்தில் இலங்கைக்கு வர புதிய அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது.

0 Responses to காணாமற்போகச் செய்யப்பட்டோர் தொடர்பில் விசாரிப்பதற்காக ஐ.நா. குழு இலங்கை வருகிறது!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com