புதிய அரசியல் கட்சியொன்றை எதிர்வரும் வாரமளவில் ஆரம்பிக்கவுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியில் இருந்து விலகியுள்ள அதன் முன்னாள் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்துள்ளார்.
இதன்பொருட்டு தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
புதிதாக தான் ஆரம்பிக்கவுள்ள அரசியல் கட்சியின் பெயர், நிறம் மற்றும் சின்னம் ஆகிய விடயங்கள் கட்சியின் மாநாட்டிலேயே தீர்மானிக்கப்படும் என்றும் சோமவன்ச அமரசிங்க கூறியுள்ளார்.
இதேவேளை, மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர்கள் தம்முடன் கலந்துரையாடுவதற்கு நிபந்தனையற்ற சந்தர்ப்பம் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தொழிற்சங்க தலைவர்கள் உள்ளிட்ட பொறுப்புள்ளவர்கள் ஏற்கனவே தம்முடன் கைகோர்த்துள்ளதாகக் கூறியுள்ள சோமவன்ச அமரசிங்க, மக்கள் விடுதலை முன்னணியின் அங்கத்தவர்கள் எவருக்கும் தாம் ஒருபோதும் அழைப்பு விடுக்கவில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

0 Responses to புதிய கட்சி எதிர்வரும் வாரம் தொடக்கம்: சோமவன்ச அமரசிங்க