தான் தலைமை வகித்த அரசாங்கம் நாட்டைக் காட்டிக் கொடுக்கவில்லை என்றும், நாட்டை பிரிக்கும் ஒப்பந்தங்கள் எதிலும் கைச்சாத்திட்டிருக்கவில்லை என்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இராணுவத்தினரை பலியிட்டு பெற்றுக் கொண்ட வெற்றியை யாருக்காகவும் விட்டுக் கொடுக்க முடியாது. பாரிய கடற்பரப்பினையும், இரண்டு மாகாணங்களையும் பிரிவினைவாதிகளிடமிருந்து தமது அரசாங்கம் காப்பாற்றியது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
யுத்த வெற்றி நிகழ்வொன்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கொழும்பு விகாரமாதேவி பூங்காவில் நேற்று திங்கட்கிழமை மாலை நடைபெற்றது. அங்கு பேசும் போதே முன்னாள் ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
வடக்கில் தமிழ்த் தலைமைகள் சுதந்திரமாக நடமாடுவதற்கு இராணுவத்தினரே காரணம். நாட்டை மீட்டெடுத்த இராணுவத்தினரை நினைவுகூர்வதற்கு நாங்கள் யாரிடமும் அனுமதி கோர வேண்டிய தேவையில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
0 Responses to நாம் நாட்டைக் காட்டிக் கொடுக்கவில்லை: யுத்த வெற்றி விழாவில் மஹிந்த