Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நாட்டில் போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட பின்னரும் நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

‘பிரிவினைவாதத்தை வெற்றி கொண்ட நாள்’ எனும் தலைப்பில் இன்று செவ்வாய்க்கிழமை மாத்தறையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் தெரிவித்துள்ளதாவது, “நாட்டில் போரை நிறைவுக்கு கொண்டுவருவதற்காக முன்னின்று உழைத்த அரச தலைவர்கள் சகலரையும் நான் மதிக்கின்றேன். அதற்காக உயிர்த்தியாகம் செய்த முப்படையினரையும் நினைவுகூர்கின்றேன்.

போருக்கு பின்னரான காலத்தில் நல்லிணக்கத்துக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை. மாறாக, பௌதீக வளங்களை கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகளே முன்னெடுக்கப்பட்டது. நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்தி ஆகிய இரண்டும் ஒன்றோரு ஒன்றாக இணைந்து முன்னெடுக்கப்படல் வேண்டும்.

தேசிய பாதுகாப்புக்காக முன்னெடுக்கவேண்டிய சகல நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும். பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்குவதற்கு இடமளிக்கமாட்டேன். பாதுகாப்பு படைகளின் மனித வளங்கள் மேம்படுத்தப்படும். அத்தோடு, பௌதீக வளங்களும் பெற்றுகொடுக்கப்படும்.

நாட்டு மக்களுக்கு பெற்றுக்கொடுக்கவேண்டிய சகலவற்றையும் பெற்று கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பேன். நாட்டில் மற்றுமொரு அத்தியாயத்துக்கான பக்கம் இன்று ஆரம்பிக்கப்படுகின்றது.” என்றுள்ளார்.

0 Responses to போருக்குப் பின் நல்லிணக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை: ஜனாதிபதி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com