Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் நேற்று வெள்ளிக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் அவர், தனது சொத்து மதிப்பு ரூ.117 கோடி என குறிப்பிட்டுள்ளார்.

2011ஆம் ஆண்டு தேர்தலின் போது அவர் தாக்கல் செய்த வேட்புமனுவில் தனது சொத்து மதிப்பு ரூ.51.40 கோடி எனவும், 2006ஆம் ஆண்டு தேர்தலில் போது சொத்து மதிப்பு ரூ.24.7 கோடி எனவும் குறிப்பிட்டிருந்தார். ஒவ்வொரு தேர்தலின் போதும் ஜெ.,வின் சொத்து மதிப்பு இரண்டு மடங்காக காட்டப்பட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜூன் 27ஆம் தேதி சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அதிமுக சார்பில் ஜெயலலிதா நேற்று பிற்பகல் 01.50 மணியளவில் தண்டையார்பேட்டையில் உள்ள மண்டல அலுவலகத்திற்கு வந்து வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். அதில் தனது சொத்து மதிப்பு ரூ.117.13 கோடி என குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to ஜெயலலிதா வேட்புமனுத் தாக்கல் செய்தார்; சொத்து மதிப்பு 117 கோடி!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com