Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தேர்தல் சீர்திருத்தத்தை உள்ளடக்கிய 20வது திருத்தச் சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதும், யாரும் எதிர்பாராத தருணத்தில் பாராளுமன்றம் கலைக்கப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமிழ் முற்போக்குக் கூட்டணியுடனான சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.

தமிழ் முற்போக்குக் கூட்டணி தலைவர் மனோ கணேசன், பிரதி தலைவர்கள் பழனி திகாம்பரம், வி.இராதாகிருஷ்ணன் ஆகியோர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நேற்று புதன்கிழமை பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்து உரையாடினர்.

இந்த சந்திப்பு தொடர்பாக தமிழ் முற்போக்குக் கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளதாவது, “எமது சந்திப்பின் போது பல்வேறு விடயங்களை நாம் கலந்துரையாடினோம். ஜனாதிபதி எம்மிடம் கூறிய விடயங்களில் சிலவற்றை கூறமுடியும்.

பிரதமர் 24 ஆம் திகதி பாராளுமன்றம் கலைக்கப்படலாம் என கூறியிருக்கலாம். இந்த பாராளுமன்றம் இனியும் தொடர முடியாது. இது கலைக்கப்பட வேண்டும். அதற்கான முடிவை நான் எடுத்து விட்டேன். திட்டவட்டமான திகதியை நான் இன்னமும் தீர்மானிக்கவில்லை. இன்னமும் சில தினங்களில் திகதி தீர்மானிக்கப்படும். எனினும் எவரும் எதிர்பாரா நேரத்தில் திடீரென பாராளுமன்றம் கலைக்கப்படும் என்பதை கூறி வைக்க விரும்புகிறேன் என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

20வது திருத்தச் சட்டம் வர்த்தமானி பிரகடனத்துடன் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். 20வது திருத்த சட்டமூலத்தில் என்னவித உள்ளடக்கம் இருந்தாலும், அவற்றில் அவசியமானவை குழுநிலை விவாதத்தின் போது கொண்டுவரப்படும்.

புதிய திருத்தங்களை உள்வாங்குவதன் மூலம் மேலும் திருத்தி அமைக்கப்படும். இதன் மூலம், நான் ஏற்கனவே வழங்கியுள்ள சிறுபான்மை மக்களுக்கு பாதகமான எதையும் தேர்தல் திருத்தம் என்ற பெயரில் செய்ய இடந்தர மாட்டேன். சிறுபான்மை மக்களுக்கு தொகுதி நிர்ணயம் தொடர்பில் அநீதி ஏற்பட்டு விடக்கூடாது என்ற காரணத்தினாலேயே நான் மொத்த உறுப்பினர் தொகையை 255 ஆக ஆரம்பத்திலேயே அறிவித்து இருந்தேன் என்பதையும் ஜனாதிபதி ஞாபக மூட்டினார்.” என்றுள்ளார்.

0 Responses to 20வது திருத்தம் நிறைவேறியதும் பாராளுமன்றம் கலைக்கப்படும்; த.மு.கூ.வுடனான சந்திப்பில் மைத்திரி!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com