Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கடந்த மாதம் வன்புணர்வுகுட்படுத்தி படுகொலை செய்யப்பட்ட புங்­குடுதீவு  மாணவி சிவலோகநாதன் வித்தியா கொலையின் குற்றவாளிகளுக்கு அதிகபட்சமான தண்டனை அவசரமாக வழங்கப்பட வேண்டும் என கிழக்கு மாகாண சபையில் முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் பிரேரணை ஒன்றை சமர்பித்தார்.

கிழக்கு மாகாண சபையின் சபை அமர்வு இன்று காலை 9.30 மணிக்கு இடம்பெற்றது.

அதன்போது கொலை செய்யப்பட்ட மாணவி வித்யாவின் குடும்பத்திற்கு அனுதாபம் தெரிவிக்கப்பட்டதுடன்,  கொலையாளிகளுக்கு வழங்கப்படும் தண்டனை இந்த நாட்டில் குற்றச்செயல்களில் ஈடுபடும் அனைவருக்கும் இது ஒரு பாடமாக அமைய வேண்டும் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.

கடந்த ஆட்சியின் பிழைகள் இன்றைய ஆட்சியின் வெளிப்படைத் தன்மையில் புரியும்! முதலமைச்சர்

கிழக்கு மாகாண சபை ஜூன் மாத சபை அமர்வு இன்று காலை 9.30 மணிக்கு சபைத் தவிசாளர் சந்திரதாஷ கலபதி தலைமையில் சபை மண்டபத்தில் ஆரம்பமானது.

மாகாண சபை உறுப்பினர் ஆர்.துரைரட்ணம் முன்வைத்தை பிரேரணை தொடர்பில் எதிர்கட்சி உறுப்பினர் சந்திரகாந்தன் பிள்ளையான் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட்
கிழக்கில் இன்று நல்லாட்சி மலர்ந்திருக்கிறது. இந்நல்லாட்சியில் என்ன நடைபெறுகிறது, என்ன விடயங்கள் நடைபெறவிருக்கிறது என்பன தெளிவாக அறிவிக்கப்பட்டே அனைத்து செயல்களும் இடம்பெறும்.

கடந்த ஆட்சியில் நடந்த அநியாயங்கள் இன்றைய ஆட்சியில் இடம்பெற யாருக்கும் இடமளிக்கப் படமாட்டாது.

இனமத வேறுபாடின்றி சகல மக்களுக்கும் சரியான சேவைகள் சென்றடைய இன்றைய கிழக்கின் ஆட்சியில் இணைந்திருக்கும் கூட்டு மிகவும் தெளிவாக இருக்கும். அதற்காக மிகவும் உன்னிப்பாக நடவடிக்கைகளை மேற்கொள்ள தீர்மாணித்து செய்து கொண்டிருக்கிறோம்.

கடந்த ஆட்சியில் முதலமைச்சர்களும், அமைச்சர்களும் செய்த சேவைகள், நடவடிக்கைகளின் வெளிப்படைத் தன்மையினை இன்றைய ஆட்சியின் சேவைகளின் போது தெளிவாக மக்களும் மக்களின் பிரதிநிதிகளும் விளங்கிக் கொள்ளும் வகையில் அதன் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.

யாரும், யாரையும் ஏமாற்ற முடியாது. நிதியொதுக்கீட்டில் மோசடி நடக்கிறது என்று உறுப்பினர் பிள்ளையான் கூறுவதில் சற்றேனும் உண்மையில்லை. முன்னாள் முதலமைச்சராக இருக்கின்ற போது அரச பணங்கள், மக்களின் வரிப்பணங்கள் வீண்விரையம் செய்யப்பட்டது போன்று இன்றைய ஆட்சியில் இடம்பெற மாட்டாது.

அனைத்து செயர்பாடுகளும் சபைக்கும் மக்களுக்கும் சரியான முறையில் அறிவிக்கப்படும் அதன்பின்னர் மக்கள் தெரிந்து கொள்வார்கள் எங்கே என்ன நடைபெற்றுள்ளது என்று என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

0 Responses to வித்யா கொலைக் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும்: முதலமைச்சர்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com