Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நாமலிடம் நான்கரை மணி நேரம் விசாரணை!

பதிந்தவர்: தம்பியன் 12 June 2015

நாடாளுமன்ற உறுப்ப்பினர் நாமல் ராஜபக்சவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவு காவற்துறையினர் சுமார் நான்கரை மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர்.

நாமல் ராஜபக்ச இன்று விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்துடன் அவரிடம் இன்று காலை 9 மணியில் இருந்து மதியம் 1.45 மணி வரை விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

காவற்துறையினரின் விசாரணைகளுக்கு தான் முழுமையான ஒத்துழைப்புகளை வழங்குவதாக நாமல் ராஜபக்ச தெரிவித்திருந்தார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அங்குனுகொலபெலஸ்ஸ நகர சபை மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போது, நாமல் ராஜபக்சவின் பாதுகாப்பு அதிகாரி துப்பாக்கியை எடுத்துச் சென்றமை, தென் மாகாண அமைச்சர் டி.வி. உபுல் நிதி மோசடி விசாரணை பிரிவின் அதிகாரிகளை கல்லெறிந்து கொலை செய்ய போவதாக கூறிய சம்பவம் ஆகியன குறித்து நாமல் ராஜபக்சவிடம் விசாரணை நடத்தப்பட்டதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.

வாக்குமூலம் வழங்க குற்றப் புலனாய்வுத்துறைக்கு சென்றார் நாமல்

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக சற்றுமுன்னர் குற்றப்புலனாய்வுத்துறை தலைமையகத்துக்கு சென்றுள்ளார்

கடந்த 8ஆம் திகதியன்று தம்மை குற்றப்புலனாய்வுத்துறையில் ஆஜராகுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்திருந்தார். எனினும் அதற்கான காரணத்தை அவர் கூறவில்லை.

பெரும்பாலும் அண்மையில் தென்மாகாண அமைச்சர் டி.வி உப்புல் வெளியிட்ட கருத்து தொடர்பிலேயே நாமலிடம் விசாரணை நடத்தப்படலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

மஹிந்த ராஜபக்ச பிரதமரானால், நிதிமோசடி தவிர்ப்பு பொலிஸார் கல்லெறிந்து கொல்லப்படுவர் என்றும் இதற்காக நாமல் ராஜபக்ச குறித்த பொலிஸாரின் விபரங்களை திரட்டுவதாகவும் உப்புல் தெரிவித்திருந்தார்.

இதன் அடிப்படையில் உப்புல் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அங்குனுகொலபெலஸ்ஸ சம்பவம் தொடர்பில் நாமலிடம் விசாரணை

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தற்போது குற்றப்புலனாய்வுத்துறையில் வாக்குமூலம் வழங்கிக்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் தரப்பு தகவலின்படி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்கேற்ற அங்குனுகொலபெலஸ்ஸ கூட்டத்தின்போது ஏற்பட்ட பாதுகாப்பு பிரச்சினை குறித்து நாமலிடம் வாக்குமூலம் பெறப்படுகிறது.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய இராணுவ வீரர் ஒருவர் கைதுசெய்யப்பட்டார். இவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு பிரிவை சேர்ந்தவர் என்றும் அவர் நாமல் ராஜபக்சவுடனேயே குறித்த பிரதேசத்துக்கு வந்திருந்தார் என்றும் விசாரணைகளில் இருந்து தெரியவந்தது.

இதனடிப்படையிலேயே நாமலிடம் இன்று விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.

0 Responses to நாமலிடம் நான்கரை மணி நேரம் விசாரணை!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com