பஷில் ராஜபக்ஷ உள்ளிட்ட நான்கு பேரை எதிர்வரும் 18ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கடுவலை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சந்தேகநபர்கள் நால்வரும் இன்று புதன்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோதே இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருடன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்களில், பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் முன்னாள் செயலாளர் டொக்டர் நிஹால் ஜயதிலக்க, திவிநெகும அபிவிருத்தி திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் ஆர்.ஏ.ஏ.கே.ரணவக்க மற்றும் அதன் பணிப்பாளர்களில் ஒருவரான ஆர்.பி.பீ.திலக்கசிறி ஆகியோரும் அடங்குகின்றனர்.
திவிநெகும திணைக்களத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணைகளை அடுத்து பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ உள்ளிட்ட நால்வரையும் அண்மையில் கைது செய்தனர்.




0 Responses to பஷில்க்கு விளக்கமறியல் நீடிப்பு!