அரசியலமைப்பின் 19வது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் பொதுத்தேர்தல் இடம்பெற்று முடியும் வரை காபந்து அரசாங்கத்தில் அமைச்சரவை அமைச்சர்கள் மாத்திரமே செயற்பட முடியும் என்று நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
“19வது திருத்தச் சட்டத்திற்கு அமைய பொதுத் தேர்தல் நடைபெற்று புதிய அரசாங்கம் தேர்ந்தெடுக்கப்படும் வரை காபந்து அரசாங்கம் ஆட்சியில் இருக்கும். இந்த அரசாங்கத்தில் அமைச்சரவை அமைச்சர்கள் மாத்திரமே செயற்படுவார்கள்.
1978ஆம் ஆண்டு அரசியலமைப்பு யாப்பின் 47 சரத்திற்கு இணங்க பாராளுமன்றம் கலைக்கப்பட்ட பின்னர் பொதுத் தேர்தல் நடத்தப்பட்டு புதிய அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பேற்கும் வரை காபந்து அரசாங்கம் ஆட்சியிலிருக்கும். இந்த அரசாங்கத்தில் இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களாக செயற்பட்டவர்கள் அனைவரதும் பதவி இல்லாமல் போயுள்ளது. இவர்கள் காபந்து அரசாங்கத்தில் செயற்படமாட்டார்கள்” என்று நீதி அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to காபந்து அரசாங்கத்தில் அமைச்சரவை அமைச்சர்களே செயற்படுவர்: விஜயதாச ராஜபக்ஷ