Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

முதலமைச்சர் ஜெயலலிதா வெற்றி!

பதிந்தவர்: தம்பியன் 30 June 2015

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராம் 1,51,215 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்ததற்கு ஆர்.கே.நகர் தொகுதி வாக்காளர்கள் மற்றும் தோழமை கட்சியினருக்கும் ஜெயலலிதா நன்றி தெரிவித்துள்ளார்.

வாக்காளப் பெருமக்கள் தம்மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு ஏற்ப பாடுபடுவேன் என ஜெயலலிதா உறுதியளித்துள்ளார். மேலும் ஜெயலலிதா வெற்றி பெற்றதை அடுத்து அதிமுக தொண்டர்கள் இனிப்புகள் வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடி வருகின்றனர். இன்று மாலை சபாநாயகர் முன்னிலையில் அவர் சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்கிறார். இவரை எதிர்த்து போட்டியிட்ட அனைவரும் டெபாசிட் இழந்துள்ளனர்.

சமூக ஆர்வலர் டிராபிக் ராசாமி 2,939 வாக்குகள் பெற்று 3வது இடத்தை பிடித்தார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்கியது. சென்னை ராணி மேரி கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. 17 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டன.

அனைத்து தபால் ஓட்டுகளும் ஜெயலலிதாவுக்கு கிடைத்துள்ளன. நோட்டா ஓட்டுகள் மொத்தம் 1,672 பேர் பதிவு செய்துள்ளனர். ஆர்.கே.நகர் தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருந்த வெற்றிவேல் ராஜினாமா செய்ததை தொடர்ந்து 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.

இதில் அதிமுக சார்பில் முதலமைச்சர் ஜெயலலிதா, இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் சி.மகேந்திரன், டிராபிக் ராமசாமி, மொத்தம் 28 பேர் போட்டியிட்டனர். இடைத்தேர்தலில் 74.4 சதவீத வாக்குகள் பதிவாகின. முறைகேடு புகார் காரணமாக 181 எண் வாக்குச்சாவடியில் நேற்று மறுவாக்குப்பதிவு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

0 Responses to முதலமைச்சர் ஜெயலலிதா வெற்றி!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com