Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கிளிநொச்சி மலையாளபுரத்தில் உள்ள பொது மக்கள் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளை யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தலைமையிலான குழுவினர் சந்தித்தனர்.

கடந்த 13ம் திகதி நடைபெற்ற நிகழ்வில், கரைச்சி பிரதேசசபை உபதவிசாளர் நகுலேஸ்வரன், கரைச்சி பிரதேசசபை உறுப்பினர் சுகந்தன் உட்பட தமிழ் தேசியக் கூட்டமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்தச்சந்திப்பின் போது மலையாளபுரத்தின் வாழ்வாதார தேவைகள் மற்றும் போரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை சேர்ந்த மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கான தேவைகள், காணாமல் போனோர் தொடர்பான விடயங்கள் பற்றி மக்களும், கிராம அபிவிருத்தி சங்க பிரதிநிதிகளும் நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட குழுவினருக்கு எடுத்துரைத்தனர்.

அத்துடன் வீட்டுத்திட்டம் காணி பிரச்சனைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதுடன் போதைப்பொருள் பாவனைகளை கட்டுப்படுத்துவது தொடர்பாகவும் மக்கள் கருத்துக்களை முன்வைத்தனர்.

போர் முடிந்த பின் அரசாங்கத்தினாலும், அரசாங்க தரப்பு எம்.பிக்களாலும் பல்வேறு வாக்குறுதிகள் வழங்கப்பட்டபோதும் எதுவும் நிறைவேற்றப்படவில்லை என்றும் அவர்கள் முறையிட்டுள்ளனர்.

0 Responses to போர் முடிந்தும் இன்னும் வாழ்வில் அமைதி இல்லை

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com