Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வடக்கு மாகாணத்தில் விதிமுறைகளை மீறி இயங்கும் மதுபான சாலைகளை மூடுமாறும், புதிய மதுபான சாலைகளுக்கான அனுமதி வழங்கலை நிறுத்துமாறு கோரி வடக்கு மாகாண சபையின் சார்பில் அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் மத்திய நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

யாழ். குடாநாட்டில் அதிகரித்துள்ள குற்றச்செயல்கள், வன்முறைச் சம்பவங்களுக்கு இங்கு அதிகரித்துக் காணப்படும் மதுபான நுகர்வும் போதைப்பொருள் பாவனையுமே காரணம் என்ற கருத்து மக்கள் மனங்களில் பரவலாக காணப்படுகின்றது எனவும் அவர் அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “மதுவரித் திணைக்களத்தின் வழிகாட்டல்களையும் நியமங்களையும் விதிகளையும் மீறியே மதுபான நிலையங்கள் உரிமங்களை பெற்றே, வடக்கு மாகாணத்தில் இயங்கி வருகின்றன.

பல மதுபான விற்பனை நிலையங்கள் பொது இடங்களிலும், சமய வணக்கத்தலங்கள், பாடசாலைகள், பொது நிறுவனங்கள் எனபனவற்றுக்கு அண்மித்தனவாகவுமே காணப்படுகின்றன. எனவே மதுபான சாலைகளுக்கு வழங்கப்பட்டிருக்கும் உரிமங்கள் யாவும் சட்ட விதிகளுக்கு அமைவாக வழங்கப்பட்டுள்ளனவா என்பதை முழுமையாக மீளாய்வு செய்யுமாறும் நிதி அமைச்சை வடக்கு மாகாண சபை வேண்டி நிற்கிறது.

அவ்வாறு விதிகளை மீறி இயங்கும் மதுச்சாலைகளின் உரிமங்களை இரத்துச் செய்ய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இதுகுறித்து நிதி அமைச்சர், கலால் திணைக்கள ஆணையாளர் நாயகம் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர் ஆகியோர் நடவடிக்கை எடுக்கவேண்டும்.” என்றுள்ளது.

இந்தக் கடிதத்தின் பிரதிகள் வடக்கு மாகாண ஆளுநர், கலால் திணைக்கள ஆணையாளர் நாயகம், வடக்கு மாகாணத்திலுள்ள மாவட்ட அரசாங்க அதிபர்கள், மாவட்ட கலால் திணைக்கள உதவி ஆணையாளர்கள் மற்றும் பிரதி பொலிஸ் மா அதிபர் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

0 Responses to விதிமுறைகளை மீறி இயங்கும் மதுபான சாலைகளை மூடுமாறு வடக்கு மாகாண சபை கோரிக்கை!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com