Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழகத்திலிருந்து வரும் காய்கறிகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக பூச்சிக்கொல்லி மருந்து கலந்துள்ளதாக கேரளா புகார் தெரிவித்துள்ளது.

கேரளாவின் உணவுக் கட்டுப்பாட்டு ஆணையர் அனுபமா, தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு கொண்டு வரப்படும் காய்கறிகளில் பூச்சிக்கொல்லி மருந்துகள் அளவுக்கு அதிகமாக கலந்து உள்ளன என்று ஆய்வில் தெரிய வந்துள்ளதாகக் கூறியுள்ளார். மேலும் அளவுக்கு அதிகமாக எனும்போது அனுமதிக்கப்பட்ட அளவை விட 5 மடங்கு அதிகமாக பூச்சிக்கொல்லி மருந்துகள் உள்ளன என்றும் அனுமா கூறியுள்ளார்.

அதோடு இதுக்குறித்து ஆய்வு நடத்தி இதைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, தமிழக அரசுக்கு அறிக்கை அனுப்பி உள்ளதாகவும் அனுபமா தெரிவித்துள்ளார்.

0 Responses to தமிழகத்திலிருந்து வரும் காய்கறிகளில் அதிக பூச்சிக்கொல்லி மருந்து: கேரளா

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com