Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மஹிந்த ராஜபக்‌சவை சர்வாதிகாரி என்று வரலாறுதான் அறிவிக்கும். இவ்வாறு தமிழகத்திலிருந்து வாரம் இருமுறை வெளிவரும் சஞ்சிகை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஹிட்லர், முசோலினி, இடிஅமீன் போன்ற சர்வாதிகாரிகள் வரிசையில் ராஜபக்‌சவை சர்வதேச நாடுகள் அறிவிக்காதது ஏன்? என தமிழக சஞ்சிகையான ஜூனியர் விகடனில் வெளியாகும் கழுகார் பதில்கள் பத்தியில் கேள்வி தொடுக்கப்பட்டது.

அதற்கு பதிலளிக்கையில்,

முன்னாள் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌சவை சர்வாதிகாரி என்று வரலாறுதான் அறிவிக்கும்.

எந்த நாடும் ஹிட்லரையும் முசோலினியையும் இடிஅமீனையும் அவர்கள் வாழ்ந்த காலத்தில் கொடூரமானவர்களாக அறிவிக்கவில்லை.

குணத்தால், நடவடிக்கைகளால், இரக்கமற்ற போக்குகளால் அவர்களை வரலாற்றின் போக்குதான் அத்தகைய அடையாளங்களைக் கொடுக்கிறது. என கூறப்பட்டுள்ளது.

0 Responses to ராஜபக்‌சவை சர்வாதிகாரி என்று வரலாறு அறிவிக்கும்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com