Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பஷில்க்கு பிணை!

பதிந்தவர்: தம்பியன் 15 June 2015

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான பஷில் ராஜக்ஷவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை பிணை வழங்கியுள்ளது.

பஷில் ராஜபக்ஷவை ஒரு இலட்சம் ரூபாய் ரொக்கப் பிணை மற்றும் 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான நான்கு சரீர பிணைகளில் விடுவிக்க கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி குசலா சரோஜினி வீரவர்தன உத்தரவிட்டுள்ளார்.

பிணையாளர்கள் இருவரும் அரசாங்க ஊழியராக இருக்கவேண்டும். என்பதுடன் அந்த பிணையாளர்கள் இருவரும் நெருங்கிய உறவினர்களாகவும் இருக்கவேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் முன்னாள் செயலாளர் வைத்தியர் நிஹால் ஜயதிலக்க மற்றும் திவிநெகும திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஆர்.ஏ.கே. ரணவக்க, திவிநெகும வங்கியின் முன்னாள் தலைர் பி.பீ. திகலக்கசிறி ஆகியோரும் நிபந்தனை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

திவிநெகும திணைக்களத்தின் நிதியை மோசடி செய்தனர் என்ற குற்றச்சாட்டிலேயே இவர்கள் கைதுசெய்யப்பட்டு கடுவலை நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

0 Responses to பஷில்க்கு பிணை!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com