தெஹிவளைப் பகுதியில் வைத்து 2008ஆம் ஆண்டு இளைஞர்கள் சிலரைக் கடத்தியமை தொடர்பில் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொடவின் மெய்பாதுகாவலர் ஒருவர் தொடர்புபட்டுள்ளார் என்று குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இதனால் குறித்த கடத்தலுக்கும் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொடவிற்கும் தொடர்பு இருக்கலாம் எனவும், அவருக்கு தெரியாமல் இது நடந்திருக்க வாய்ப்பில்லை என்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் குறிப்பிட்டுள்ளனர்.
5 இளைஞர்கள் இவ்வாறு கடத்தப்பட்டமை தொடர்பில், பெற்றோர் செய்த முறைப்பாடுகள் குறித்து கொழும்பு பிரதான நீதிவான் முன்னிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை விசாரணை நடைபெற்றது.
இளைஞர்கள் கடத்தல் தொடர்பில் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொடவின் தனியார் பாதுகாப்பு அதிகாரி சம்பத் முனசிங்கவுக்கு இதில் தொடர்பு இருப்பதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களப் பொறுப்பதிகாரி நீதிமன்றில் சாட்சியம் அளித்துள்ளார்.
கடத்தப்பட்ட இளைஞர்களின் பெற்றோரிடம் குறித்த நபர் கோடி ரூபா கப்பம் கோரியுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளதெனவும் அவர் கூறியுள்ளார்.
கடத்தப்பட்ட இளைஞர்கள் கொழும்பு மற்றும் திருகோணமலை கடற்படை முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டிருந்தனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் விசாரணை நடத்தி கொழும்பு கோட்டை நீதிவானுக்கு அறிவித்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்கள பொறுப்பதிகாரி நீதிவான் நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு மீதான விசாரணை அடுத்த மாதம் 14ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனிடையே, தனக்கும் குறித்த கடத்தலுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட அறிவித்துள்ளார்.

0 Responses to கடத்தல்களில் முன்னாள் கடற்படைத் தளபதிக்கு தொடர்பு(?); குற்றப் புலனாய்வுப் பிரிவு!