பாகிஸ்தானை மிரட்டும் வகையில் இந்திய அமைச்சர்கள் பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் கூறியுள்ளார்.
இந்திய பாதுகாப்புப் படையினர் மியான்மர் எல்லைக்குள் புகுந்து தீவிரவாதிகளை அழித்துள்ளது, பாகிஸ்தானின் தீவிரவாத ஊக்குவிப்புக்கு எச்சரிக்கை என்று ஒரு அமைச்சரும், மியான்மர் தாக்குதலைக் கண்டு பாகிஸ்தான் அரண்டு போயுள்ளது என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கரும் கூறியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. இதற்கு பதில் அளிக்கும் வகையில் இஸ்லாமாபாத்தில் பேசியுள்ள நவாஸ் ஷெரீப், இந்தியாவுடன் நல்லுறவு பேணுவதையே பாகிஸ்தான் விரும்புகிறது என்று கூறியுள்ளார்.
மேலும், பாகிஸ்தானை மிரட்டும் வகையில் இந்திய அமைச்சர்கள் பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும், இந்திய அமைச்சர்களின் இந்த பேச்சால் பாகிஸ்தான் மக்கள் மிகவும் கொந்தளிப்புடன் உள்ளனர் என்றும், இது தொடர்ந்தால் விளைவு விபரீதமாக இருக்கும் என்றும் நவாஸ் ஷெரீப் கூறியுள்ளார்.

0 Responses to பாகிஸ்தானை மிரட்டும் வகையில் இந்திய அமைச்சர்கள் பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்: நவாஸ் ஷெரீப்