Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நுவரெலியாவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த கார் ஒன்று ஹற்றன் - நுவரெலியா பிரதான வீதியில் மல்லியப்பு பகுதியில் வைத்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியதில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இன்று மாலை 3.30 மணியளவில் இவ்விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நால்வர் பயணித்த இந்த காரில் ஒருவர் காயமடைந்துள்ளார் என ஹற்றன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வீதி வழுக்கியதன் காரணமாகவே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த கார் சேதங்களுக்குள்ளாகியுள்ளதுடன், காயமடைந்தவர் சிறுகாயத்துடன் மயிரிழையில் தப்பியுள்ளார்.

மலையகத்தில் தற்போது நிலவி வரும் சீரற்ற காலநிலையின் காரணமாக பனிமூட்டம் அதிகரிப்பதாகவும், அடைமழை காரணமாக வீதி வழுக்கும் தன்மையுடையதுமாக காணப்படுகின்றது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் வாகன சாரதிகள் மிகவும் அவதானத்துடன் பயணிக்க வேண்டும் என பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

0 Responses to மாணவி வித்யாவின் படுகொலையைக் கண்டித்து புத்தளத்தில் ஆர்ப்பாட்டம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com