Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இன்று செவ்வாய்க்கிழமை காலை கோண்டாவில் நந்தாவில் அம்மன் கோவில் பகுதியில் இடம்பெற்ற ரயில் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் வயது 55  என்பவரே ஸ்தலத்திலேயே உயிரிழந்தவராவார்.

இன்றைய தினம் காலை 9 மணியளவில் குறித்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கொக்குவில் பகுதியில் புகையிரத கடவையை கடக்க முற்பட்ட போது குறித்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மேலும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும், சடலமானது யாழ் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

0 Responses to ரயில் விபத்தில் ஒருவர் பலி! யாழ். கோண்டாவில் பகுதியில் சம்பவம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com