Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வெள்ளிக்கிழமை மாலை ஈராக்கின் கான் பனி சாட் என்ற நகரில் அமைந்துள்ள பரபரப்பான திறந்த சந்தை ஒன்றின் மீது வெடிகுண்டுகள் அடங்கிய டிரக் வண்டி மூலம் நடத்தப் பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் குறைந்தது 100 பேர் கொல்லப் பட்டும் 116 இற்கும் அதிகமானவர்கள் படுகாயம் அடைந்தும் உள்ளனர்.

இத்தாக்குதல் நடத்தப் பட்ட சமயத்தி ரமடான் நிறைவுக் கொண்டாட்டத்துக்குத் தம்மைத் தயார் படுத்திக் கொள்வதற்காக நூற்றுக் கணக்கானவர்கள் கூடியிருந்ததாகக் கூறப்படுகின்றது.

மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் ரமடான் பண்டிகையையும் பொருட்படுத்தாது கடந்த சில தினங்களாக நடத்தப் பட்டு வரும் தாக்குதல்கள் அங்கு முஸ்லிம்களிடையே பெரும் சோகத்தி ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஈராக்கில் கடந்த சில மாதங்களில் நடத்தப் பட்ட மோசமான தற்கொலைத் தாக்குதல் இதுவென்பதால் அங்கு தாக்குதல் நடத்தப் பட்ட டியாலா மாகாணம் உட்பட பூங்காக்கள் மற்றும் பொழுது போக்கு இடங்களை மூட அரசு உத்தரவிட்டுள்ளதுடன் தொடர்ந்து 3 நாட்களுக்குத் துக்கம் கடைப்பிடிக்கப் படுகின்றது.

ஐ.நா இன் தகவல் படி ஏப்பிரல் 30 வரையிலான கடந்த 16 மாத காலப் பகுதியில் ஈராக்கில் தீவிரவாதத் தாக்குதல்களில் 15 000 பேர் கொல்லப் பட்டுள்ளனர் என அறிவிக்கப் பட்டுள்ளது. மேலும் வெள்ளிக்கிழமை ஷைட்டி முஸ்லிம்களைக் குறி வைத்து தாக்குதல் நடத்தப் பட்ட கான் பனி சாட் தலைநகர் பக்தாத்தில் இருந்து வடக்கே 35 Km தொலைவில் தான் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

0 Responses to 100 பேரைப் பலிகொண்ட ஈராக் தற்கொலைக் குண்டுத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றது ISIS

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com