Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கில் பொதுத் தேவைக்கு எனக் கூறி அரசாங்கத்தினால் ஆக்கிரமிக்கப்பட்ட பொது மக்களின் காணிகளில் 13 ஆடம்பர விடுதிகள் மற்றும் 2 மாட்டுப் பண்ணைகளை இராணுவத்தினர் அமைத்துள்ளனர் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா குற்றஞ்சாட்டியுள்ளார்.

அத்தோடு, இராணுவத்தினர் பொது மக்களின் விவசாய நிலங்களில் விவசாயத்திலும் ஈடுபட்டு வருகின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு பேசும் போதே மாவை சேனாதிராஜா மேற்கண்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “பொது மக்களின் காணிகளை உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தி அபகரித்த காணிகளை இராணுவத்தினர் வர்த்தக நோக்கங்களுக்காகப் பயன்படுத்துகின்றனர். அவை மக்களின் நிலங்கள் அவர்களுக்கே அவை திரும்பத் தரப்பட வேண்டும்.” என்றுள்ளார்.

0 Responses to இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளில் 13 ஆடம்பர விடுதிகள், 2 மாட்டுப் பண்ணைகள்: மாவை சேனாதிராஜா

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com