Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மஹிந்த ராஜபக்ஷ பொதுத் தேர்தலில் தோல்வியடைவார் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளிப்படையாக கூறிய பின்னரும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு வாக்களிப்பது பயனற்றது என்று அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷ பதவியிலிருந்த போது தனது பண பலத்தினால் ஏனைய அரசியல் கட்சிகளினதும் பாராளுமன்ற உறுப்பினர்களை தன் பக்கம் சேர்த்துக் கொண்டதன் மூலம் கட்சிகளுக்குள் குழப்பத்தை தோற்றுவித்தமைக்கான வினைகளை தற்போது அவர் அறுவடை செய்ய நேரிட்டிருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் அபிவிருத்தி என்னும் பேரில் பாரிய கடன்களுக்கு மத்தியில் துறைமுகத்தையும், விமான நிலையத்தையும் நிர்மாணித்துள்ள மஹிந்த ராஜபக்ஷவால் இளைஞர்களுக்கு பிழைப்பு நடத்தக் கூடிய வகையிலான ஒருதொழிற்சாலை அல்லது நிறுவனமேனும் திறந்து வைக்கப்பட்டுள்ளதா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

0 Responses to மஹிந்த தோல்வியடைவர்; ஐ.ம.சு.கூ.வுக்கு வாக்களிப்பது பயனற்றது: லக்ஷ்மன் கிரியெல்ல

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com