பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு - தமிழர் விளையாட்டுத்துறை நடாத்தும் மாவீரர் நினைவு சுமந்து கழகங்களுக்கு இடையேயான இல்லமெய்வல்லுநர் தெரிவுப்போட்டி கடந்த 05.07.2015 ஞாயிற்றுக்கிழமை CENTRE SPORTIF NELSON MANDELA AVENUE PAUL LANGEVIN 95200 SARCELLES பகுதியில் மிகவும் சிறப்பாக ஆரம்பமானது.
காலை 9 மணியளவில் ஆரம்பமான இந்நிகழ்வில் ஈகைச்சுடரினை 1994 ஆம் ஆண்டு யாழ். காங்கேசன்துறைக் கடற்பரப்பில வீரச்சாவடைந்த கடற்கரும்புலி அங்கயற்கண்ணி அவர்களின் சகோதரன் ஏற்றிவைத்தார். தொடர்ந்து பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் முக்கிய உறுப்பினர் திரு.பாலசுந்தரம் அவர்கள் கரும்புலிகள் திருஉருவப்படத்திற்கான மலர்வணக்கம் செலுத்தி உரை நிகழ்த்தினார்.
அவர் தனது உரையில் கரும்புலிகளின் உருவாக்கம் பற்றியும் இன்று போராட்ட வடிவங்கள் மாறியுள்ள நிலையில் நாம் மேற்கொள்ளவேண்டிய கடப்பாடுகள் பற்றியும் தெளிவுபடுத்தினார்.
கழகங்களிடையே கரப்பந்தட்டாம், ஈட்டி எறிதல், தட்டெறிதல், குண்டுபோடுதல், பெண்களுக்கான உயரம்பாய்தல் போன்ற விளையாட்டுக்கள் சிறப்பாக இடம்பெற்றன.
கரம்பந்தாட்டத்தில் இறுதிப்போட்டிக்கு வள்ளுவன் விளையாட்டுக்கழகமும் ஈழம் றோயல் (சிவப்பு) விளையாட்டுக்கழகமும் தெரிவாகி விறுவிறுப்பாக ஆடியதைக் காணமுடிந்தது.
இதில் முதல் இடத்தை ஈழம் றோயல் (சிவப்பு) விளையாட்டுக்கழகம் பெற்றுக்கொண்டது. மூன்றாம் இடத்தை நியூ ஸரார் விளையாட்டுக்கழகம் பெற்றுக்கொண்டது.
தொடர்ந்து போட்டிகள் மாலை 7 மணிவரை இடம்பெற்றன. எதிர்வரும் 11.07.2015 சனிக்கிழமை தெரிவுப்போட்டிகளும். 12.07.2015 ஞாயிற்றுக்கிழமை இறுதிப்போட்டிகளும் CENTRE SPORTIF NELSON MANDELA AVENUE PAUL LANGEVIN 95200 SARCELLES பகுதி மைதானத்தில் இடம்பெறவுள்ளன.
இந்நிகழ்வுகளில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு பிரான்சு தமிழர் விளையாட்டுத்துறையினர் அழைப்புவிடுத்துள்ளனர்.
ஊடகப்பிரிவு - பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு.

0 Responses to பிரான்சில் சிறப்பாக இடம்பெற்ற மாவீரர் நினைவு சுமந்த இல்ல மெய்வல்லுநர் தெரிவுப்போட்டிகள் - 2015