Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் ஜனாதிபதித் தேர்தலில் பொது எதிரணியின் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்க எடுத்த முடிவு பிழையானது என்று பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சரும், அந்தக் கட்சியின் (அ. இ. ம. கா) தேசிய அமைப்பாளருமான எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், மைத்திரிபால சிறிசேனவை ஆதரிப்பதாக நேற்று திங்கட்கிழமை அறிவித்ததையடுத்து காத்தான்குடியில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லா நடத்தியிருந்தார். அதன்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அரசாங்கத்துடன் இரண்டு கட்டப் பேச்சுவார்த்தை நடத்தியது. இதன்போது எமது கட்சி முன்வைத்த கோரிக்கைகளை அரசாங்கம் ஏற்றுக்கொண்டதுடன் அதனை நிறைவேற்றித் தருவதாகவும் வாக்குறுதியளித்தது.

அதில் பிரதானமாக ஜாதிக ஹெல உறுமய கட்சியினால் தடுத்து நிறுத்தப்பட்ட முஸ்லிம்களுக்காக கட்டப்பட்ட 500 வீடுகளையும் மீள முஸ்லிம்களுக்கு வழங்குவதற்காக குழுவொன்றும் ஜனாதிபதியி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டது. இந்த கட்டத்தில் அ. இ. ம. கா. தலைவர் மைத்திரிபாலவை ஆதரிக்க தீர்மானித்துள்ளமை மிகுந்த கவலை யளிக்கிறது.

இந்த முடிவை நான் மறுப்பதுடன் நான் உட்பட கொழும்பு மாகாண சபை உறுப்பினர் பாயிஸ், காத்தான்குடி நகர சபைத் தலைவர் எஸ். எச். அஸ்வர் உட்பட காத்தான்குடி நகர சபை மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிக்கின்றோம். ரிஷாட் பதியுதீன் எடுத்த முடிவு முட்டாள்தனமானது. எமது தீர்மானத்தில் எந்தவொரு மாற்றமும் இல்லை” என்றுள்ளார்.

0 Responses to மைத்திரியை ஆதரிக்கும் ரிஷாட் பதியுதீனின் முடிவு முட்டாள்தனமானது: எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com