தமிழீழ விடுதலைப் புலிகளின் மத்திய குழு உறுப்பினரும், முதுபெரும் தளபதியுமான கேணல் கிட்டு அவர்கள் உட்பட 10 மாவீரர்களின் நினைவு வணக்க நிகழ்வு பிரித்தானியாவில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது.
1993ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 16ஆம் நாள் முக்கிய சமாதானச் செய்தியுடன் தாயகம் திரும்பிய இந்தப் போராளிகள் இந்திய அரசின் சதியால் வங்கக் கடலில் தங்கள் உயிர்களை ஈகம் செய்திருந்தனர். கேணல் கிட்டு, லெப். கேணல் குட்டிசிறி, மேஜர் வேலன் அல்லது மலரவன், கப்ரன் ஜீவா, கப்ரன் குணசீலன், கப்ரன் றொசான், கப்ரன் நாயகம், லெப்ரினன்ட் தூயவன், லெப்ரினன்ட் அமுதன், லெப்ரினன்ட் நல்லவன் ஆகியோரது நினைவு வணக்க நிகழ்வு லண்டன் சவுத்தோல் அரங்கில் நேற்று மாலை (16-01-2010) நடைபெற்றது.
அக வணக்கத்துடன் ஆரம்பித்த நிகழ்வில் ஈகச்சுடரை வீரவேங்கை மாவீரர் சாந்தம் என்றழைக்கப்படும் பத்மசிறி அவர்களின் தந்தை பாலகிருஸ்ணன் குருக்கள் ஏற்றி வைக்க, தொடர்ந்து மலர் வணக்கம் இடம்பெற்றது. மாவீரர் கானங்கள், கவிதை, நடனம், பட்டி மன்றம் போன்ற அரங்க நிகழ்வுகளுடன் தமிழ்நாட்டின் தமிழின உணர்வாளர் திரு. சிறீனிவாச ராவ், மற்றும் பாவலர் கந்தையா இராஜமனோகரன் ஆகியோரது சிறப்புரைகளும் இடம்பெற்றன.
தமிழீழத் தேசியத் தலைவர்கள் அவர்களது நனவுறு கனவின் தோழனாகத் திகழ்ந்த கேணல் கிட்டு அவர்களது பெயரில் கிட்டு பீரங்கிப் படையணியையும், சின்னச் சிரிப்புடன் தமிழீழ மண்ணிற்காய் அரும்பணியாற்றிய லெப்ரினன்ட் கேணல் குட்டிசிறியின் பெயரில் மோட்டார் அணியையும் தமிழீழத் தேசியத் தலைவர் உருவாக்கியிருந்தமை அவர்கள் தமிழீழ மண்ணிற்கு ஆற்றிய பணியை உணர்த்தி நிற்கின்றன.
இந்த மாவீரர்களிற்கு தீருவிலில் நடுகல் நாட்டியபோதே அவர்கள் பெயரில் படையணிகளை உருவாக்க தேசியத் தலைவர்கள் அவர்கள் உறுதி பூண்டதுடன், இந்தப் படையணிகள் களத்தில் அரும்பணியாற்றியிருந்தன.
கிட்டண்ணா என்று அன்பாக அழைக்கப்பட்ட கேணல் கிட்டு அவர்கள் போர்க்களத்தில் வீரனாகவும், தமிழீழ மக்களின் தோழனாகவும் திகழ்ந்தார் என தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் புகழாரம் சூட்டியிருப்பதுடன், பல்துறை ஆற்றல் மிகுந்த கேணல் கிட்டு அவர்கள் தமிழீழ மண்ணிற்கு ஆற்றிய பணிகள் வார்த்தைகளில் வடிக்க முடியாதவை.

0 Responses to பிரித்தானியாவில் கேணல் கிட்டு உட்பட 10 மாவீரர்களின் நினைவு வணக்க நிகழ்வு