சட்டத்தினை நிலைநாட்ட வேண்டிய பொலிஸார் சட்டத்தினை மதிப்பதே இல்லை. கசிப்பு உற்பத்தியிலும், போதைப் பொருள் உற்பத்தியிலுமே அவர்கள் ஈடுபடுகின்றார்கள் என்று முன்னாள் பிரதியமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் குற்றம் சுமத்தியுள்ளார். யாழ்.மாவட்டச் செயலகத்தில் நேற்று வேட்புமனுவினை தாக்கல் செய்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.இவ்விடையம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்:-
கடந்த சாட்சிக் காலத்தில் இருந்து இன்றுவரைக்கும் பொலிஸ் நிர்வாகம் சட்டத்திற்கு உட்பட்டு நடத்தப்படவில்லை. அது சட்ட திட்டங்களை மீறியே செயற்படுகின்றது. ஆனால் பொது மக்களும் நாங்களும் சட்டத்தினை கடைப்பிடிக்கின்றோம். ஆனால் இன்றுவரை பொலிஸ் நிர்வாகம் சட்டத்தினை கடைப்பிடிக்கவில்லை. வடக்கில் உள்ள பெரும்பாலான பொலிஸ் நிலையங்கள் தமிழ் மக்களுடைய சொத்துக்களை சூரையாடப்பட்டு அவர்களுடைய வீடுகளிலேயே பொலிஸ் நிலையத்தினை அமைத்துள்ளார்கள்.
ஜ.தே.க ஆட்சியை கைப்பற்றியவுடன் முதல் பணியாள மக்களுடைய வீடுகளில் உள்ள பொலிஸ் நிலையம் அகற்றப்பட்டு, அவர்களுக்காக சொந்தமான புதிய பொலிஸ் நிலையங்கள் அமைத்துக் கொடுக்கப்படும்.சட்டத்தினை மதிக்கத் தெரியாத இந்த பொலிஸ் அதிகாரிகள் கடந்த காலங்களில் பொலிஸ் நிலையங்களில் வைத்தே கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வந்தார்கள். அத்துட்ன தமிழ் பெண்களுடன் சேட்டைகளிலும் ஈடுபட்டு வந்தார்கள்.
அநாகரிகமான முiயில் நடத்து கொண்டார்கள். பாடசாலைகளுக்கு அருகில் போதைப் பொருட்களை கொண்டுவந்து விற்பனை செய்பவர்களும் பொலிஸாராகவே இருந்துள்ளார்கள். இந்த பொலிஸாரும், இராணுவமும் முற்றுமுழுதாக வடபுலத்தில் உள்ள தமிழ் மக்களை திட்டமிட்டு போதைப் பொருள் பாவனைக்குள் ஈர்த்துள்ளார்கள். இதை இன்றுமட்டும் அவர்கள் கடைப்பிடித்து வருகின்றார்களெனவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

0 Responses to வடக்கிலிருந்து பொலிஸார் அடித்து விரட்டப்படவேண்டும்! விஜயகலா குற்றச்சாடடு!