கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தன்னை துரோகியாக கருதியது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து தான் வெளியேறியமை 37 வருடங்களாக செய்ய முடியாத நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை அதிகாரங்களை குறைக்கவே எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மாணவர் அணி இணையத்தளத்தை அங்குரார்ப்பணம் செய்து வைக்கும் நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றிய போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் தெரிவித்துள்ளதாவது, “முன்னாள் ஜனாதிபதிகள் செய்யாத ஒன்றை அதிகாரம் கிடைத்ததும் நான் செய்து முடித்தேன். 19வது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றிக் கொண்டாலும், 20வது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றிக் கொள்வதில் சிக்கல் நிலை தோன்றியது. இருப்பினும் எதிர்வரும் தேர்தலில் எந்தக் கட்சி வெற்றிபெற்றாலும் 100 நாட்களில் தேர்தல் சட்டத்தை மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்றுள்ளார்.

0 Responses to ஜனாதிபதித் தேர்தலின் போது சுதந்திரக் கட்சி என்னை துரோகியாக கருதியது: ஜனாதிபதி