Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஜனநாயகப் போராளிகள் என்கிற புதிய கட்சியை ஆரம்பித்துள்ள முன்னாள் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் வவுனியாவில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற சந்திப்பு தோல்வியில் முடிந்துள்ளது.

இதனை, ஜனநாயகப் போராளிகள் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான நடேசபிள்ளை வித்தியாதரன் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் அவர்களுடன் இணைந்து தேர்தலில் போட்டியிடுவதற்கும் விருப்பம் தெரிவித்து, அதனைத் தமது கோரிக்கைகளாக இந்தச் சந்திப்பின் போது முன்வைத்ததாக வித்தியாதரன் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், இப்போதைய அரசியல் சூழலில் முன்னாள் விடுதலைப் புலிகளுடன் இணைந்து செயற்படுவது தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு நெருக்கடியைக் கொடுப்பதாக அமையுமென கூறி தமது கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

முன்னாள் போராளிகள் ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்து அரசியலில் ஈடுபடுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணங்கவில்லை என்பது தமக்கு வேதனையும் மனவருத்தமும் அளிக்கிறது என கூட்டத்தில் பங்குபற்றிய முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர் துளசி தெரிவித்துள்ளார்.

அடுத்த கட்டமாக தங்களுக்குள் பேச்சுக்கள் நடத்தி முடிவெடுக்கப் போவதாகவும், இந்தப் பொதுத் தேர்தலில் தாங்கள் போட்டியிடுவதா? இல்லையா? என்பதைத் தீர்மானிக்கப் போவதாகவும் துளசியும், வித்தியாதரனும் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

0 Responses to கூட்டமைப்பு ஜனநாயகப் போராளிகள் பேச்சு தோல்வியில் முடிவு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com