இலங்கையில் பயங்கரவாதத் தடைச் சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதாகவும், சித்திரவதைகள் தொடர்ந்தும் இடம்பெறுவதாகவும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஒப்புக்கொண்டுள்ளார்.
“மிகவும் விமர்சிக்கப்படுவதும், அதிகமாகத் தவறாகப் பயன்படுத்தப்படுவதுமான பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்குப் பதிலாக, பயங்கரவாதத்துக்கெதிரான புதிய சட்டமொன்றைக் கொண்டுவருவதற்கு, முதல் வரைவின் இறுதிக் கட்டத்தில், செயற்குழுவொன்று ஈடுபட்டு வருகிறது.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 32வது கூட்டத் தொடரில், நேற்று புதன்கிழமை மனித உரிமைகள் ஆணையாளர் சையிட் அல் ஹூசைன் இலங்கை மற்றும் மியன்மார் தொடர்பிலான வாய்மொழி அறிக்கைகளை முன்வைத்தார்.
அதன்பின்னர், இலங்கை சார்பில் கருத்து வெளியிட மங்கள சரமவீரவுக்கு சந்தர்ப்பம் அளிக்கப்பட்டது. அதன்போதே, அவர், மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
வெளிவிவகார அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “சித்திரவதை தொடர்பாக முழுமையான எதிர்ப்பான கொள்கையை அரசாங்கம் கொண்டுள்ள போதிலும், அது இடம்பெறுவது இல்லாமல் போகவில்லை, ஆனால் குறைவடைந்துள்ளது. இதன் தீவிரத் தன்மையை நாம் உணர்ந்துள்ளோம். பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும் பொதுக் கலந்துரையாடலை ஏற்படுத்தவும், இலங்கையின் தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவினதும் இலங்கை பொலிஸ் ஆணைக்குழுவினதும் உதவியும் பெறப்பட்டுள்ளன.” என்றுள்ளார்.

0 Responses to பயங்கரவாதத் தடைச் சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகின்றது: ஐ.நா.வில் இலங்கை ஒப்புதல்!