Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நேற்று ஞாயிற்றுக்கிழமை சிரிய அரச வான் படை தலைநகர் டமஸ்கஸ்ஸுக்கு வடகிழக்கே நடத்திய விமானத் தாக்குதலில் குறைந்த பட்ச ம் 100 பேர் கொல்லப் பட்டிருப்பதாக இன்று திங்கட்கிழமை சிரியாவில் இயங்கி வரும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

கடந்த 4 வருடங்களாக இடம்பெற்று வரும் சிரிய உள்நாட்டில் ஒரே நாளில் நடத்தப் பட்ட விமானத் தாக்குதலில் மிக அதிகளவு மக்கள் பலியாகி இருப்பது இதுவே முதன் முறையாகும்.

சிரிய கிளர்ச்சிப் படையினர் இயங்கி வரும் டௌமா என்ற பகுதியில் உள்ள சந்தை ஒன்றின் மீது இலக்கு வைத்தே இத்தாக்குதல் நிகழ்த்தப் பட்டிருப்பதாகவும் இதில் சரியாக 96 பேர் கொல்லப் பட்டிருக்கலாம் எனவும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது. இதில் கொல்லப் பட்டவர்களில் 95 பேரின் சடலங்கள் மீட்கப் பட்டு அதில் 9 பேரைத் தவிர ஏனையவர்களது சடலங்கள் அடையாளம் காணப் பட்டுள்ளதாகவும் மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை துருக்கியைத் தளமாகக் கொண்டு இயங்கும் சிரிய எதிர்கட்சி அரசியல் குழு இந்த விமானத் தாக்குதல் குறித்து அளித்த செய்தியில் இது வேண்டுமென்றே பல பொது மக்கள் உயிர்களைப் பலியாக்கத் திட்டமிட்டு நிகழ்த்தப் பட்ட ஓர் தாக்குதல் போன்றே தென்படுகின்றது எனக் குற்றம் சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் குறித்த விமானத் தாக்குதலால் சேதமடைந்த நகர்ப் பகுதி குறித்த வீடியோப் பதிவுகள் சமூக வலைத் தளங்களில் வெளியாகியுள்ளன. இத்தாக்குதலில் 250 பேருக்கும் அதிகமானவர்கள் படுகாயம் அடைந்தும் உள்ளனர். சிரிய உள்நாட்டுப் போர் காரணமாக இதுவரை 7.6 மில்லியன் மக்கள் உள்நாட்டுக்குள்ளும் 4 மில்லியன் மக்கள் அண்டை நாடுகளுக்கும் இடம் பெயர்ந்திருப்பதாக ஐ.நா கணிப்பு கூறுகின்றது. சுமார் 2 இலட்சத்துக்கும் அதிகமான மக்களைப் பலி கொண்டுள்ள இந்த உள்நாட்ட்டுப் போரால் ஏற்பட்டுள்ள அகதிகள் பிரச்சினையே நமது தலைமுறையில் மிகப் பாரிய அகதிகள் பிரச்சினை என்பது குறிப்பிடத்தக்கது.

0 Responses to ஞாயிற்றுக் கிழமை சிரிய விமானத் தாக்குதலில் பலி எண்ணிக்கை 100 ஐ அண்மித்துள்ளது: ஆர்வலர்கள்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com