Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமிருந்து தனக்கு சிறந்த காதல் கடிதமொன்று கிடைத்ததாகவும், அதற்கு தான் பதில் கடிதம் எழுதியுள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அம்பாந்தோட்டையில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பிரச்சாரக் கூட்டமொன்றில் பேசும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளதாவது, “ஜனாதிபதியிடமிருந்து நேற்றைய தினம் (வியாழக்கிழமை) காதல் கடிதமொன்று கிடைத்தது. அதனை இன்று காலை தான் நான் வாசித்தேன். பல யோசனைகள் இருந்தன. அவற்றில் சில நாளாந்தம் கூறுபவை. 113 ஆசனங்களுக்கு அதிகமாக கிடைத்தால், இந்த யோசனைகளை செய்யலாம். 113 ஆசனங்களுக்கு குறைவாகக் கிடைத்தால், இவற்றை செய்யலாம். சிறிய யோசனையொன்று மாத்திரம் மங்களகரமாக இல்லை. அதனை நான் நன்மையாகவே எடுத்துக்கொண்டேன். நன்றி தெரிவித்து சிறிய பதிலொன்றை அனுப்பினேன். அந்தக் காதல் கடிதத்தை அனுப்பியதற்கு நன்றி தெரிவிக்க வேண்டாமா? அது சிறந்த காதல் கடிதமாகும்.” என்றுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் எனும் நிலைப்பாட்டில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு கடிதமொன்றை கடந்த வியாழக்கிழமை அனுப்பி வைத்திருந்தார். அது, தொடர்பிலேயே மேற்கண்டவாறு மஹிந்த ராஜபக்ஷ கருத்துரைத்துள்ளார்.

0 Responses to மைத்திரியிடமிருந்து காதல் கடிதம் கிடைத்தது; பதில் கடிதம் அனுப்பினேன்: மஹிந்த

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com