Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பொதுத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், தேர்தலானது சுகந்திரமானதும் வன்முறையற்றதுமான சாதாரணமானதொரு தேர்தலாக நடைபெற வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

2015ஆம் ஆண்டுக்கான பாராளுமன்ற தேர்தலின் கண்காணிப்பு நடவடிக்கையின் பொருட்டு ஐரோப்பா சங்கம், பொது நலவாய நாடுகள் அமைப்பிலிருந்து வருகை தந்துள்ள குழுவினருடனான கூட்டம், ஜனாதிபதி செயலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதன்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல்கள் ஆணையாளர், பொலிஸ் மா அதிபர் உட்பட சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அனைத்து அதிகாரிகளும் சுதந்திரமானதும் சுயாதீனதுமானதொரு தேர்தல் வாக்களிப்பினை நிகழ்த்துவதற்கு பங்களிப்பு செலுத்துமாறு ஜனாதிபதி வேண்டிக்கொண்டார்.

ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளதாவது, “கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் வரை தேர்தல் முறையானது முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது. தேர்தல் பிரசாரங்களின் பொருட்டு அரச சொத்துக்கள் பயன்படுத்தப்பட்டன. எனினும், எதிர்வரும் காலங்களில் நடைபெறப் போகும் தேர்தல்களில் இவ்வாறான செயற்பாடுகளை நாட்டில் காண்பது அரிதாக இருக்கும். கடந்த முறை ஜனாதிபதி தேர்தலின் போது எமது நாட்டு மக்கள் தாங்கள் புத்திசாலிகள் என்பதை நிரூபித்துக்காட்டி நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்தியுள்ளனர்.” என்றுள்ளார்.

0 Responses to வன்முறையற்ற சுதந்திரமான தேர்தல் நடைபெற வேண்டும்: ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com