தமது விடுதலையை வலியுறுத்தி தமிழ் அரசியல் கைதிகள் கடந்த திங்கட்கிழமை (ஒக்டோபர் 12) முதல் மேற்கொண்டிருந்த உண்ணாவிரதப் போராட்டத்தினை இன்று சனிக்கிழமை (ஒக்டோபர் 17) தற்காலிகமாக முடிவுக்கு கொண்டு வந்துள்ளனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் இன்று வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்று கைதிகளுடன் உரையாடினார். அதன் பின்னரே தங்களின் உண்ணாவிரதப் போராட்டத்தை தற்காலிகமாக கைவிடுவதற்கு அரசியல் கைதிகள் சம்மதம் தெரிவித்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
“ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இடம்பெற்ற அலைபேசி உரையாடலின் போது தமிழ் அரசியல் கைதிகளின் விவகாரம் குறித்து ஜனாதிபதி தீர்மானமொன்றை எடுப்பதற்கு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் கைதிகளுக்கு எடுத்துரைத்தார். அதனையடுத்து, போராட்டத்தை தற்காலிகமாக முடித்துக் கொள்வதற்கு, (அதாவது நவம்பர் 07ஆம் திகதி வரை நிறுத்தி வைப்பதற்கு) தமிழ் அரசியல் கைதிகள் முடிவு செய்தனர்.” என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் தற்காலிகமாக முடிவுக்கு வந்தது!