நீண்ட காலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ்ப்பாணம் முனியப்பர் ஆலயத்தின் அருகாமையில் கவனயீர்ப்புப் போராட்டமொன்று இன்று வெள்ளிக்கிழமை காலை 09.00 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது.
தமது விடுதலையை முன்னிறுத்தி தமிழ் அரசியல் கைதிகள் கடந்த திங்கட்கிழமை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்து முன்னெடுத்துள்ள நிலையிலேயே, அவர்களுக்கு ஆதரவு வழங்கும் பொருட்டு இந்த கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழர் விடுதலைக் கூட்டணி உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகளும், சிவில் அமைப்புக்களும், பொது மக்களும் குறித்த போராட்டத்தில் பங்கெடுத்துள்ளன.




0 Responses to தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழில் கவனயீர்ப்புப் போராட்டம்!