Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கனேடிய நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் ஆளும் கர்சர்வேட்டிவ் கட்சி தோல்வியைத் தழுவியுள்ளதுடன், எதிர்த்து போட்டியிட்ட லிபரல் கட்சி ஆட்சியைப் பிடித்துள்ளது. இதையடுத்து கனடாவின் புதிய பிரதமராக 42 வயது மட்டுமே ஆகும் ஜஸ்டின் ரூடே பதவியேற்கிறார்.

9 ஆண்டுகாலம் ஆட்சியிலிருந்த கன்சர்வேட்டிவ் கட்சியும், கனேடிய பிரதமராக பதவி வகித்து வந்த ஸ்டீபன் ஹார்பரும் இதையடுத்து ஆட்சியிலிருந்து விலகுகின்றனர்.

ஸ்டீபன் ஹார்பர் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட வளர்ச்சித் திட்டங்கள் பல மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில், லிபரல் கட்சியின் பிரச்சாரங்களும், வாக்குறுதிகளும் சூடுபிடித்திருந்தன.

முன்னாள் கனேடிய பிரதமர் பியெர் ட்ருதாவின் மகனான ஜஸ்டின் ட்ருதா மக்களிடையே செல்வாக்கு செலுத்தத் தொடங்கினார்.

இதேவேளை லிபரல் கட்சி சார்பில் ஸ்காபரோ ரூச்பார்க் தொகுதியில் போட்டியிட்ட ஹரி ஆனந்தசங்கரியும் வெற்றி பெற்றுள்ளார். கடந்த தேர்தலில் ஆளும் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றியீட்டிய ஈழத்தமிழர் ராதிகா சிற்சபை ஈசனும் இம்முறை சில ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியுள்ளார்.

இவர் கடந்த 2011 ம் ஆண்டு வெற்றி பெற்ற போது புலம்பெயர்ந்த தேசஙக்ளில் முதலாவது தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் எனும் பெருமையை பெற்றிருந்தார்.

தறோது வெற்றி பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவாகும் ஹரி ஆனந்த சங்கரி இயல்பில் ஒரு சட்டத்தரணி ஆவார். அவரது இராஜாங்க மற்றும் பண்பான அணுகுமுறைகள் கனேடிய தமிழர்களிடையே செல்வாக்கு பெற்றிருந்தது.

0 Responses to கனடா நாடாளுமன்றத் தேர்தலில் லிபரல் கட்சி ஆட்சியைப் பிடித்தது!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com