ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இப்போது அதிகளவில் படையினருடன் தொடர்புபட்ட நிகழ்வுகளில் பங்கேற்க ஆரம்பித்துள்ளார்.
இந்த மாதத்தில் மட்டும், அவர் இத்தகைய மூன்று நிகழ்வுகளில் பங்கேற்றிருக்கிறார்.
கடந்த 8ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் நடந்த நிகழ்வில், முப்படைகளிலும் பணியாற்றுகின்ற, ஓய்வுபெற்ற படை அதிகாரிகள் 32 பேருக்கு விசிஷ்ட சேவா விபூஷணய விருதை வழங்கினார்.
அதையடுத்து கடந்த 19ஆம் திகதி சீனக்குடா விமானப்படைத் தளத்தில் நடந்த, பயிற்சியை முடித்து வெளியேறும் விமானப் படையினரின் அணிவகுப்பு நிகழ்வில் பங்கேற்றார்.
கடந்த 20ஆம் திகதி கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவிலும் அவர் பங்கேற்றிருந்தார்.
இந்த நிகழ்வுகளில் அவர் உரையாற்றிய போது, போரில் படையினரின் பங்களிப்பையும் அர்ப்பணிப்பையும் அவர் வெகுவாகப் புகழ்ந்தார்.
இவற்றில், விருது வழங்கும் விழாவில் ஜனாதிபதியே பங்கேற்க வேண்டும். அது தான் மரபு. கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிலும் அவரே பங்கேற்க வேண்டும்,
ஏனென்றால் அவர் தான் பாதுகாப்பு அமைச்சர், படைகளின் தளபதி. ஆனால், சீனக்குடா விமானப்படை முகாம் நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தின் அறிவுறுத்தலால் ஜனாதிபதியின் பங்கேற்புடன் ஒழுங்கு செய்யப்பட்டது.
திடீரெனப் படையினருடன் தொடர்புடைய நிகழ்வுகளில் ஜனாதிபதியை அதிகளவில் காண முடிவதும், அவர்களைப் புகழும் வகையில் உரையாற்றத் தொடங்கியிருப்பதும் ஆச்சரியத்துக்குரிய விடயங்களல்ல.
ஆனால், இது ஒரு முக்கியமான விடயம்.
ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் விசாரணை அறிக்கைக்கு அமையவும், ஜெனீவா தீர்மானத்துக்கு அமையவும், போரின் போது இடம்பெற்ற மீறல்கள், குற்றங்கள் தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்க வேண்டிய கட்டத்துக்குள் அரசாங்கம் நுழைந்திருக்கிறது.
எந்தளவுக்கு கனதியானது, நியாயமானது, நம்பகமானது, சுதந்திரமானது என்பதை உறுதியாகக் கூற முடியாது போனாலும், ஓரளவுக்கேனும் காத்திரமான விசாரணை ஒன்றை ஆரம்பிக்க வேண்டிய நிலையில் அரசாங்கம் இருப்பதை மறுப்பதற்கில்லை.
ஆறரை ஆண்டுகளுக்கு முன்னர், போரில் அரசபடைகள் வெற்றியீட்டிய போது, அவர்களைத் தூக்கித் தலையில் வைத்துக் கொண்டாடியது அப்போதைய அரசாங்கம்.
ஆனால், இப்போது அதே போரில் குற்றங்களை இழைத்தவர்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ள வேண்டியவேளை வந்திருக்கிறது. குற்றங்களை இழைத்தவர்களை தண்டிக்க வேண்டிய கட்டத்துக்குள் நுழைந்திருக்கிறது அரசாங்கம்.
விரும்பியோ, விரும்பாமலோ, அரசாங்கம் இந்த விசாரணைகளை முன்னெடுத்தாக வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது. இது படையினர் மத்தியில் சந்தேகங்களையும், கேள்விகளையும் மாத்திரமன்றி, கோபத்தையும் ஏற்படுத்தும்.
அரசாங்கம் உத்தரவிட்டதற்கமையவே போரில் ஈடுபட்டோம். அதே அரசாங்கம் இப்போது எம்மீது போர்க்குற்ற விசாரணை நடத்த முனைவது சரியா என்று அவர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.
இதனைக் கருத்தில் கொண்டு தான், அரசாங்கம் ஏற்கனவே அமைச்சர் சம்பிக்க ரணவக்கவைப் பயன்படுத்தி படையினரைச் சமாளிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.
அவர் படைத்தளங்களுக்குச் சென்று, படையினரைக் காப்பாற்ற அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து விளக்கமளித்து வருகிறார். போர்க்குற்ற விசாரணை,
படையினரைத் தண்டிப்பதற்காக அல்ல என்றும் அவர்களைத் தண்டிக்க அரசாங்கம் விடாது. கருணைச் சபை மூலம் அவர்களுக்கு பொதுமன்னிப்பு அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் படையினருக்கு உறுதியளித்து வருகிறார்.
இது மட்டுமே, படையினரை சமாளிப்பதற்குப் போதாது என்பதை அரசாங்கம் அறியும். அதனால் தான், மற்றொரு பக்கத்தில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், படையினருடன் நெருக்கத்தை ஏற்படுத்தி, அவர்களுக்கு ஆதரவான கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்.
அதேவேளை, படையினருக்கு எதிரான விசாரணை நடவடிக்கைகள் விடயத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் அவ்வளவு உடன்பாடு இல்லை என்பதையும், உணர முடிகிறது.
கடந்த 16ஆம் திகதி பொலன்னறுவையில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இது தொடர்பாக பகிரங்கமாக தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார்.
அதற்கு சில நாட்கள் முன்னதாகவே, மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்சிக்காலத்தில், தாய்லாந்துக்கான தூதுவராக பணியாற்றிய முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சாந்த கொட்டேகொடவும்,
ஜப்பானுக்கான தூதுவராகப் பணியாற்றிய முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொடவும், அவுஸ்திரேலியாவுக்கான தூதுவராகப் பணியாற்றிய முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் திசார சமரசிங்கவும்,
பாகிஸ்தானுக்கான தூதுவராகப் பணியாற்றிய எயர் சீவ் மர்ஷல் ஜெயலத் வீரக்கொடியும், விசாரணை ஒன்றுக்காக குற்றப்புலனாய்வுத் துறையினரால் அழைக்கப்பட்டிருந்தனர்.
வெளிநாடுகளில் இவர்கள் பணியாற்றிய காலத்தில் இடம்பெற்ற முறைகேடுகள் குறித்து விசாரிக்கவே இவர்களை அழைக்கப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் கூறியிருந்தது.
இவர்கள் விசாரணைக்கு அழைக்கப்பட்டது பற்றிய தகவல், பாதுகாப்பு அமைச்சராக இருந்தும் தமக்குத் தெரியப்படுத்தப்படவில்லை என்றும், அது தமக்கு அதிர்ச்சி அளித்ததாகவும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தார்.
படை அதிகாரிகள், தளபதிகள் மீதான விசாரணைகளின் மீது தமக்கு ஈடுபாடு இல்லை என்பதை வெளிப்படுத்துவதாகவே அவரது இந்தக் கருத்து அமைந்திருந்தது.
அதேவேளை, நீண்டகாலத்துக்குப் பின்னர், உயர்மட்டப் படைத் தளபதிகளுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால், விசிஷ்ட சேவா விபூஷணய விருதுக்கு ஏற்பாடு செய்யப்பட்டதையும் சாதாரண நிகழ்வாக கருத்தில் கொள்ள முடியவில்லை.
ஓய்வுபெற்ற முப்படைகளின் தளபதிகளுக்கும் வழங்கப்பட்ட இந்த விருது, இராணுவத் தலைமை அதிகாரியான மேஜர் ஜெனரல் ஜெகத் டயசுக்கும் அறிவிக்கப்பட்டது.
ஆனால் அவர் இந்த நிகழ்வில் பங்கேற்று அதனைப் பெறவில்லை. அதற்கான காரணமும் வெளியிடப்படவில்லை.
மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ், இறுதிப்போரில் 57ஆவது டிவிசனை வழிநடத்தியவர். போர்க்குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருப்பவர்.
அவருக்கு எதிராக, சுவிற்சர்லாந்தில் வழக்கும் தொடுக்கப்பட்டது.
அண்மையில் அவரை, இராணுவத் தலைமை அதிகாரியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்த போது, கடுமையான விமர்சனங்களும், கண்டனங்களும் எழுந்திருந்தன.
அதன் காரணமாக, அவர் விருது வழங்கும் விழாவில், மறைக்கப்பட்டாரா என்ற கேள்விகளும் உள்ளன.
ஆனாலும், இறுதிப் போரில் 59ஆவது டிவிசனை வழிநடத்திய, மேஜர் ஜெனரல் நந்தன உடவத்தை, நான்காவது கட்ட ஈழப்போரின் பெரும்பகுதிக் காலத்தில் இராணுவ நடவடிக்கைப் பணிப்பாளராக இருந்த மேஜர் ஜெனரல் உதய பெரேரா,
இராணுவப் புலனாய்வுப் பிரிவு பொறுப்பாளராக இருந்த மேஜர் ஜெனரல் அமால் கருணாசேகர மற்றும் வன்னிப் பகுதியில் பணியாற்றிய, மேஜர் ஜெனரல்கள் சன்ன குணதிலக, லலித் தவுலகல, மலிந்த பீரிஸ், மைத்ரி டயஸ் போன்றோர் இந்த விழாவில் விருதுகளை நேரடியாகப் பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தகக்கது.
அதேவேளை, போர்க்குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கும், மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ், உள்ளிட்ட மூன்று முக்கிய இராணுவ அதிகாரிகள் விரைவில் ஓய்வுபெறவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேஜர் ஜெனரல் ஜகத் டயஸைப் பொறுத்தவரையில், அடுத்த நிலையான இராணுவத் தளபதி பதவிக்கு உயர்த்தப்பட வேண்டும், அல்லது பதவியில் இருந்து ஓய்வுபெற வேண்டும்.
இப்போதைய நிலையில், மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ் இராணுவத் தளபதி பதவிக்கு உயர்த்தப்பட்டால், அதனால் அரசாங்கம் கடுமையான எதிர்ப்புகளையும் விளைவுகளையும் சர்வதேச அரங்கில் சந்திக்க நேரிடும்.
எனவே தான், அவரை ஓய்வுபெற வைக்க அரசாங்கம் திட்டமிட்டிருக்கலாம். இவருடன், மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க, மேஜர் ஜெனரல் லலித் தவுலகல ஆகியோரும், ஓய்வுபெறவுள்ளனர்.
மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் ஓய்வுபெற வைக்கப்பட்டால், அது, இறுதிப் போரில் முக்கிய பங்காற்றிய, அதிகாரிகளுக்கு, உயர் பதவி வழங்கப்படாது என்ற சமிக்ஞையை வெளிப்படுத்தும்.
அது, இறுதிப் போரில் கடுமையாக உழைத்த படைத்தளபதிகளைப் பொறுத்தவரையில், ஒரு தண்டனையாகவும் அமையும்,
தமது உழைப்புக்கான பலன் கிடைக்கவில்லை என்ற வலி அவர்களை கடைசி வரையிலும் வாட்டுவதாக இருக்கும்.
சுபத்ரா

0 Responses to படையினருடன் தொடர்புபட்ட நிகழ்வுகளில் அதிகளவு பங்கேற்கும் ஜனாதிபதி - சுபத்ரா