Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சீனா உள்ளிட்ட உலகின் எந்த நாட்டின் கடற்படைக் கலங்களும் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளலாம் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூரின் ‘ஸ்டிரெயிட் டைம்ஸ்’ பத்திரிகைக்கைக்கு அளித்த பேட்டியின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் இந்தியாவை சீற்றத்திற்குள்ளாக்கிய சீனக் கடற்படையின் நீர்மூழ்கி கப்பல்களின் கொழும்பு துறைமுக விஜயம் குறித்து கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

பிரதமர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “இலங்கைக்கு உலக நாடுகளின் கடற்படைக் கலங்கள் வருவதற்கான அளவு கோலொன்றை நாங்கள் வகுத்துள்ளோம். அதனடிப்படையில் நீர்மூழ்கிகள் உட்பட அனைத்து கடற்படைக் கலங்களும் இலங்கைக்கு வரலாம்.

எங்களை பொறுத்தவரை அது சினேகபூர்வமான விஜயமாக காணப்பட்டால் நாங்கள் அயல்நாட்டிற்கு அது குறித்து அறிவிப்போம். குறிப்பிட்ட கப்பல்கள் இலங்கைக்கு தொடர்ச்சியாக அடிக்கடி வராத வகையில் நாங்கள் அட்டவணைகளை வகுப்போம்.

சீனாவின் நீர்மூழ்கிகள் உட்பட கடற்படைக் கலங்கள் இறுதியாக இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட வேளை, அது குறித்து தனக்கு தெரிவிக்கப்படவில்லை என இந்தியா தெரிவிக்கின்றது. இதுவே பிரச்சினைக்குரிய விடயம். நாங்கள் இது குறித்து ஆராய்ந்து பார்த்ததில் இது உண்மை என்றே தெரியவந்துள்ளது.

சீனா தனது நீர்மூழ்கிகள் விஜயத்தை முன்கூட்டியே இலங்கைக்கு தெரிவித்துள்ளது. அவர்களது நீர்மூழ்கிகள் கொழும்பு துறைமுகத்திற்கு வந்து தரித்து நின்றுவிட்டு சென்றுவிட்டன. ஜப்பான் பிரதமர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட வேளை இது இடம்பெற்றுள்ளது.

தற்போது நாங்கள் எங்கள் அளவுகோல்களின் அடிப்படையில் செயற்படுவோம். நீங்கள் உங்கள் நீர்மூழ்கிகளையும் போர்க்கப்பல்களையும் இலங்கைக்கு அனுப்ப வேண்டும். சிங்கப்பூரிடம் சிறந்த போர்க்கப்பல்கள் உள்ளன.” என்றுள்ளார்.

0 Responses to சீனா உள்ளிட்ட எந்த நாட்டின் கடற்படைக் கலங்களும் இலங்கைக்கு வரலாம்: ரணில்

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...

தொடர்புக்கு: vannionline@gmail.com