வடக்கு மாகாணத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த யுத்தத்தினால், அங்குள்ள சிறுவர்களில் பெரும்பான்மையினர் உள ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்று யாழ் பல்கலைக் கழகத்தின் மனநோயியல் பேராசிரியர் கலாநிதி தயா சோமசுந்திரம் தெரிவித்துள்ளார்.
வடக்கில் 57 சதவீதமான பிள்ளைகள் தொழிற்படுதலில் குறைபாடு உள்ளவர்களாகவும், 29 சதவீதமானோர் வடுவுக்கு பின்னரான உளச்சோர்வினால் முழுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியொன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கலாநிதி தயா சோமசுந்திரம் தெரிவித்துள்ளதாவது, “தொழிற்படுதலில் குறைபாட்டு நோயின் அறிகுறியாக பயம், உளநெருக்கிடு, உளச்சோர்வு என்பன உள்ளன. வடுவுக்கு பின்னரான உளச்சோர்வின் அறிகுறியாக கபாலக்குத்து, காக்கா வலிப்பு, வயிறுப்புண் மற்றும் மாறாத இளைப்பு என்பன உள்ளன.
79 சதவீதமான பிள்ளைகள் வடக்கு மாகாணத்தில் உள்ள கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, வவுனியா மாவட்டத்தில் யுத்தத்துக்கிடையில் இருந்தவர்களாகவும், 58 சதவீதமானவர்கள் விமான குண்டுவீச்சை பார்த்தவர்களாகவும், 40 சதவீதமானவர்கள் பீரங்கி தாக்குதலை அனுபவித்தவர்களாகவும், 30 சதவீதமானவர்கள் தம் வீடுகள் மீது தாக்குதல் நடந்ததை அனுபவித்தவர்களாகவும், 40 வீதமான மக்கள் கொல்லப்படுவதை கண்டவர்களாகவும், 77 சதவீதமானவர்கள் பல தடவை இடம் பெயர்ந்தவர்களாகவும் உள்ளனர்.
இவ்வாறான நிலையில் பிள்ளைகளின் சாதாரண விருத்திகளை, நன்னம்பிக்கை, பாதுகாப்பு உணர்வு என்பன அழிக்கப்பட்டு நிராகரிக்கபட்டு சிறுவயதிலே தீராத வடு ஏற்பட்டுள்ளது.
வன்னி மாவட்டங்களில் மருத்துவ மாணவர்கள் நடத்திய ஆய்வில், 63 சதவீதமானோர் உறவினர் அல்லது நண்பர்களில் இயற்கை முறையில் இல்லாத மரணங்களை கண்டுள்ளதாகவும், 67 சதவீதமானோர் மயிரிழையில் மரணத்திலிருந்து தப்பியவர்களாகவும், 43 சதவீதமானோர் தமக்கு தெரியாதவர்கள் கொல்லப்படுவதை கண்டவர்களாகவும், 80 சதவீதமானோர் யுத்தத்தில் சிக்கியவர்களாகவும் இருந்ததாக தெரியவந்துள்ளது.
பெற்றோர் கூட இளவயதினரின் மனதை 30 வருடங்களாகக் குழப்பியுள்ளனர். அவர் பிள்ளைகளுக்கு உரியவற்றை மறுத்துள்ளனர். உரிமைகளை துஷ்பிரயோகம் செய்துள்ளனர். குடும்ப அங்கத்தினர்களும் ஆசிரியர்களும் உடல் சார்பு தண்டனையை வழங்கி கொடுமை செய்துள்ளனர்.
மரபு ரீதியான கட்டுபாடுகள் சிதைக்கப்படுவதனால் 2007 இல் 32ஆக இருந்த சிறுவர் துஷ்பிரயோகம் 2014 இல் 99 ஆக அதிகரித்துள்ளது. வடக்கு மாகாணத்தை முழுமையாக நோக்கினால், 2013 இல் 19 சதவீதமானோர் உள நோயினாலும், 17 சதவீதமானோர் மது மற்றும் போதைவஸ்த்தால் பாதிக்கப்படுகின்றவர்களாக இருந்தனர். ” என்றுள்ளார்.

0 Responses to வடக்கிலுள்ள சிறுவர்களில் பெரும்பான்மையினர் உள ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர்: கலாநிதி தயா சோமசுந்தரம்