விநாயகமூர்த்தி முரளிதரன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து விலகி தமிழர் விடுதலைக் கூட்டணியில் இணைந்து கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்ஷ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக இருந்த காலத்தில் அந்தக் கட்சியின் உப தலைவர்களில் ஒருவராக விநாயகமூர்த்தி முரளிதரனும் பதவி வகித்திருந்தார். எனினும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கட்சித் தலைமைப் பதவியை ஏற்றபின்னர் உப தலைவர் பதவியிலிருந்து அவர் நீக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில், கடந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக தன்னை நியமிக்க வேண்டும் என்று விநாயகமூர்த்தி முரளிதரன் கோரியிருந்த போதும், அதனை கட்சி நிராகரித்திருந்தது. இந்த நிலையிலேயே, அவர் சுதந்திரக் கட்சியிலிருந்து விலகவுள்ளதாக அறிவித்துள்ளார்.
இதனிடையே, தமிழர் விடுதலைக் கூட்டணியில் விநாயகமூர்த்தி முரளிதரன் இணையவுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் தொடர்பில் தனக்கு ஏதும் தெரியாது என்று அந்தக் கட்சியின் செயலாளர் நாயகமான வீரசிங்கம் ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

0 Responses to விநாயகமூர்த்தி முரளிதரன் சுதந்திரக் கட்சியிலிருந்து விலகி ஆனந்தசங்கரியோடு இணைகின்றார்!