கிளிநொச்சி சிவபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள தமிழினியின் பூதவுடலுக்கு இன்று திங்கட்கிழமை காலை முதல் பெருந்திரளான மக்கள் இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
புற்று நோயினால் பாதிக்கப்பட்டு நேற்று ஞாயிற்றுக்கிழமை மரணமான தமிழீழ விடுதலைப் புலிகளின் மகளிர் அரசியற் துறைப் பொறுப்பாளர் தமிழினி என அழைக்கப்படும் சிவகாமினியின் பூதவுடல் கிளிநொச்சி சிவபுரத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு கொண்டு வரப்பட்டு மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அன்னாரது பூதவுடலுக்கு இன்று திங்கட்கிழமை காலை முதல் மக்கள், அரசியல் பிரமுகர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், வடமாகாண சபை உறுப்பினர்கள், முன்னாள் போராளிகள், பாடசாலை மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டு இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அன்னாரது இறுதிக் கிரியைகள் நாளை செவ்வாய்க்கிழமை மதியம் இடம்பெறவுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

0 Responses to மறைந்த தமிழினியின் பூதவுடலுக்கு அரசியல் பிரமுகர்கள் பலர் இறுதி அஞ்சலி!