Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இறுதி மோதல்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் முன்னெடுக்கவுள்ள விசாரணைகளில் சாட்சியமளிப்பதற்கு தான் தயாராக இருப்பதாக பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சி ஊடகவியலாளரும், ஆவணப்பட இயக்குனருமான கெலம் மக்ரே தெரிவித்துள்ளார்.

சர்வதே பங்களிப்புடன் நம்பத்தன்மை வாய்ந்த உள்ளக விசாரணைப் பொறிமுறையொன்றை இலங்கை அரசாங்கம் முன்னெடுத்தாலே தான் சாட்சியமளிக்கப் போவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் இறுதி மோதல்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் ஆவணப்படங்களை தயாரித்த கெலம் மக்ரே, அதற்காக பாதிக்கப்பட்டவர்களிடம் சாட்சியங்களையும் பெற்றிருக்கின்றார். அவர்கள் சார்பில் தான், சாட்சியமளிப்பதற்கு தயார் என்றும் எனினும், தன்னிடம் சாட்சியமளித்தவர்கள் தொடர்பிலான விபரங்களை வெளியிட மாட்டேன் என்று கெலம் மக்ரே மேலும் கூறியுள்ளார்.

0 Responses to போர்க்குற்ற விசாரணைகளில் சாட்சியமளிக்கத் தயார்: கெலம் மக்ரே

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com