ஆயுதங்கள் இல்லாமல் வெள்ளைக் கொடியுடன் வருபவர்களைக் கொன்று குவிப்பது அப்பட்டமான மனித உரிமை மீறல் என்பது உலக நீதி. எந்த நீதியையும் மதிக்காத இலங்கை, இந்த நீதியையும் மதிக்கவில்லை.
2009 மே 17ம் தேதி, முள்ளிவாய்க்காலில், வெள்ளைக் கொடியுடன் வந்த விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முக்கியத் தளபதிகள் மற்றும் போராளிகள் கொன்று குவிக்கப்பட்டனர்.
மே 16ம் தேதியன்றே லண்டன் பத்திரிகையாளரான சகோதரி மேரி கோல்ட்வின் மூலம் ஐ.நா. மற்றும் சர்வதேச சமூகத்தின் கவனத்துக்கு, வெள்ளைக்கொடி விவகாரம் தெரிவிக்கப்பட்டது. அந்தத் தகவலை முறைப்படி இலங்கைக்குத் தெரிவித்திருக்க வேண்டிய ஐ.நா.வின் கள்ளத்தனமும், அதை அறிந்தும் அறியாததைப் போல நிராயுதபாணிகளிடம் தங்கள் வீரத்தை நிரூபிக்கக் காத்திருந்த இலங்கையின் நரித்தனமும் சர்வதேசச் சட்டங்களின் அடிப்படையில் சர்வ நிச்சயமாகப் போர்க்குற்றம்.
இவ்வளவு நாட்களாக இந்தப் பிரச்சினையில் இலங்கை மௌனம் சாதித்தது. இப்போதுதான், அதன் மௌனம் உடைந்திருக்கிறது. 'அந்த முடிவை எடுத்தது நான்தான்' என்று ஆணவத்தோடும் அகம்பாவத்தோடும் தெரிவித்திருக்கிறான், மகிந்த ராஜபக்சவின் சகோதரனும் முன்னாள் பாதுகாப்புத் துறைச் செயலாளருமான கோத்தபாய ராஜபக்ச.
கோத்தபாயவின் இந்த ஒப்புதல் வாக்குமூலத்தை, கொழும்பிலிருந்து வெளியாகும் Island ஆங்கில நாளேடு, சென்ற வாரம் வெளியிட்டிருக்கிறது. (அந்தப் பத்திரிகைக்கு கோத்தபாய கொடுத்திருக்கும் பிரத்தியேகப் பேட்டி, சர்வதேச ஊடகங்களின் கண்களில் ஏன் படவில்லை என்பது புரியவில்லை.)
கோத்தபாய பேட்டியின் சாராம்சத்தை மட்டும் இங்கே தருகிறேன்...
"வெள்ளைக் கொடியோடு வந்த விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்களை இராணுவம் கொன்று விட்டதாகச் சொல்வது, இராணுவத்தின் மீது வைக்கப்படும் பிரதான குற்றச்சாட்டு. இது, இலங்கை இராணுவத்தின் நற்பெயருக்குக் களங்கம் கற்பிப்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்டது....
வெள்ளைக் கொடி விவகாரத்தில் இராணுவத்தின் மீது எந்தத் தவறும் இல்லை. அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே சரணடைவது தொடர்பாக ஒப்பந்தம் எதுவும் இல்லை...
விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து புலித்தேவன் அந்தத் தகவலைத் தெரிவித்ததாக, நோர்வே தூதர் என்னிடம் சொன்னார். ஆனால் யார் யார் சரணடையப் போகிறார்கள் என்கிற விவரங்கள் கிடைக்கவில்லை. தகவல் தொடர்புகள் இல்லாத நிலையில் சரணடைவோரின் அடையாளங்களை அறிய முடியவில்லை.”
இது கோத்தபாய பேட்டியின் சுருக்கம்.
ஒரு நெருக்கடியான களத்தில், நிராயுதபாணிகளாக சரணடைய வருபவர்கள், அது தொடர்பாக முன்கூட்டியே ஒப்பந்தம் செய்து கொள்வதற்கு வாய்ப்பேயில்லை. அது அவசியமும் இல்லை. 'வெள்ளைக் கொடியை உயர்த்திப் பிடித்தாலே போதும்' என்கிறது சர்வதேசச் சட்டம். பாதுகாப்புத் துறைச் செயலாளர் கோத்தபாயவுக்கு, இது எப்படித் தெரியாமல் போயிற்று?
கோத்தபாயவின் இந்தப் பேட்டி, ஒருவகையில் சாமர்த்தியமானது. முக்கிய பிரச்சினையே, வெள்ளைக் கொடியோடு வந்த போராளிகளைக் கொன்றதுதான் - என்கிற தோற்றத்தை ஏற்படுத்த கோத்தபாய தரப்பு சாமர்த்தியமாக முயன்றிருக்கிறது. அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்டது குறித்தோ, மருத்துவ மனைகள் கூட குண்டுவீசித் தகர்க்கப்பட்டது குறித்தோ, பாலியல் வன்முறை ஒரு ஆயுதமாகவே பயன்படுத்தப்பட்டது குறித்தோ பேசுவது இனப்படுகொலையை அம்பலப்படுத்திவிடும் என்பதால், அதுகுறித்து கோத்தபாய வாய் திறக்கவேயில்லை.
ஆனால், அதிமேதாவித்தனம் என்று நினைத்துப் பேசிய கோத்தபாயவின் முட்டாள்தனம் ஒன்று, அந்த சாமர்த்தியத்துக்கும் சேர்த்து உலை வைத்திருக்கிறது.
பேட்டி எடுத்த செய்தியாளர், கடைசி கடைசியாக ஒரு கேள்வி கேட்டிருக்கிறார் கோத்தபாயவிடம்! 'சரணடைய வருபவர்களின் அடையாளங்களைத் தெரிந்துகொள்ள வேண்டுமென்று, (அரசுத் தரப்பில்) விரும்பியது யார்' என்பது அந்தக் கேள்வி. அதிமேதாவி கோத்தபாயவிடமிருந்து, தெள்ளத் தெளிவாகப் பதில் வந்திருக்கிறது...... "அந்த முடிவு நான் எடுத்த முடிவு".....
வெள்ளைக் கொடி சம்பவத்துக்கு முன்பு - சுமார் ஆறேழு மாதங்கள் - வாகரையிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை எண்ணற்ற கொடுமைகளை அனுபவித்தார்கள் தமிழர்கள். ஜ.நா. அலுவலகத்தில் குழுமியியிருந்த அப்பாவித் தமிழ் மக்களைக் கொன்று குவித்ததில் தொடங்கி, பால் பவுடர் வாங்க கைக்குழந்தைகளுடன் காத்திருந்த தாய்மார்களைக் கொன்று குவித்த சம்பவம் வரை சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால், 'இதெல்லாம் என்னுடைய முடிவுதான்' என்று கோத்தபாய ஒருபோதும் சொல்லப் போவதில்லை.
ஆனால், 'வெள்ளைக் கொடியுடன் வருபவர்கள் தொடர்பான அடையாளங்களை அறிந்துகொள்ள வேண்டும் என்கிற முடிவு என்னுடைய முடிவுதான்' என்று, சம்மனே இல்லாமல் ஆஜராகி சாட்சியம் கொடுத்திருப்பதன் மூலம், வேடம் விரித்த வலையில் தானே முன்வந்து சிக்கியிருக்கிறது கோத்தபாய கழுகு. சர்வதேச விசாரணை, இன்றோ நாளையோ, என்றோ ஒருநாள் நடக்கத்தான் போகிறது. 'கோத்தபாய உத்தரவிடாமல் ஒரு துரும்புகூட அசையவில்லை... வெள்ளைக்கொடி விவகாரம் முதல் அனைத்திலும் கோத்தா ஆணைப்படியே நடந்துகொண்டோம்' என்று சொல்லித் தப்பிக்க எத்தனைப் பேர் முயல்வார்கள் என்பதை அப்போது பார்க்கத்தான் போகிறோம்.
ஆயுதங்கள் ஏதுமின்றி வெள்ளைக் கொடியோடு வந்தவர்களைக் கொன்றது, அப்பாவிப் பொதுமக்களைக் கொன்றதைப் போலவே, கடைந்தெடுத்த கோழைத்தனம். லசந்த என்கிற மரணத்துக்கஞ்சாத பத்திரிகையாளனைக் கூலிப்படை மூலம் கொன்றது கோத்தா தான் என்பது பத்திரிகையாளர்களின் குற்றச்சாட்டு. வெள்ளைக் கொடியோடு வந்த நிராயுதபாணிகளைப் படுகொலை செய்த ஒரு கோழைதான், லசந்த என்கிற நிராயுதபாணியையும் படுகொலை செய்திருக்க வேண்டும். கோத்தாவின் வாக்குமூலத்திலிருந்து இது தெளிவாகிறது.
அப்பாவி மக்களை மட்டுமில்லாமல் வெள்ளைக் கொடியோடு வந்த போராளிகளையும் கொன்றால்தான், இனப்படுகொலை நடந்தது என்பதைச் சொல்ல சாட்சியமேயிருக்காது என்று ராஜபக்சக்கள் கருதியதை கோததபாய அம்பலப்படுத்தியிருப்பதுதான் இந்தப் பேட்டியின் முக்கிய அம்சம்.
இப்போது மட்டுமில்லை, 1983லும், இலங்கைத் தீவு முழுவதும், தமிழ் மக்கள் மீது திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலைவெறித் தாக்குதல், அரசின் பரிபூரண ஆசி மற்றும் ஆதரவுடன்தான் அரங்கேறியது. இராணுவம், காவல்துறை உள்ளிட்ட அனைத்து அரசு இயந்திரங்களும் அந்த வெறியாட்டத்துக்குத் துணைநின்றன. இது ஒரு திட்டமிட்ட இனப்படுகொலை - என்று வேதனையோடு குறிப்பிட்டார் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி.
இந்திரா காந்தியின் நேர்மையான பார்வை, சோனியாவின் பரிவாரத்துக்கு அறவே இல்லை. சங்கப் பரிவாரத்துக்கோ, பசுமாட்டைக் கொன்றால் மட்டும்தான் கோபம் பொத்துக்கொண்டு வருகிறது. 2009ல், இருபத்தாறாவது மைலில் நடந்த இனப்படுகொலை தொடர்பான முந்தைய அரசின் அணுகுமுறைகள் இரக்கமற்றவை என்றால், இப்போதிருக்கும் அரசின் அணுகுமுறைகள் ஈவிரக்கமற்றவை!
'செத்துத் தொலைக்கும் வரை தொப்புள்கொடி உறவை நம்பிக் கொண்டிருந்ததை விட, உயிரைக் காப்பதற்காக பௌத்தனாகித் தொலைத்திருக்கலாம்' என்று, கொழும்பு ஆங்கிலப் பத்திரிகை ஒன்றின் வாசகர் குறிப்பிட்டிருந்தது இப்போது நினைவுக்கு வருகிறது.
ஐம்பதுகளில், பௌத்த சிங்களப் பேரினவாதத்துடன் அனுசரித்துப் போனால்தான் உயிர்பிழைக்க முடியும் என்ற நிலையில், நீர்க்கொழும்பு, புத்தளம் போன்ற பகுதிகளில் தமிழர்கள் பௌத்தத்தைத் தழுவ நேர்ந்த அவல வரலாற்றை வேதனையுடன் சுட்டிக் காட்டியிருக்கிறார் அவர். இவர்களைப் போன்றவர்களின் குரல், இந்தியாவின் செவிகளில் விழுகிறதா இல்லையா?
மகிந்த ராஜபக்சவை இந்தியாவுக்குள் அனுமதிக்காதே - என்று சுரணை இருக்கிற அத்தனைப் பேரும் போராடினோம், தமிழ்நாட்டில்! ஒன்றரை லட்சம் தமிழரின் உயிர்களை மதிக்காத மத்திய அரசு, எட்டரைக் கோடித் தமிழரின் உணர்வையும் மதிக்கவில்லை. அந்த மனித மிருகத்தை சீராட்டிப் பாராட்டி நடுவீட்டில் நிறுத்தி மரியாதை செலுத்தியது. திருப்பதி கோயில் நிர்வாகம், அதன் வரலாற்றில் முதல்முறையாக ஒரு மிருகத்துக்குப் பரிவட்டம் கட்டி அழகு பார்த்தது.
ராஜபக்சவை இந்தியாவுக்கு அழைத்து வந்து மரியாதை கொடுத்தே ஆகவேண்டும் என்று ஒற்றைக்காலில் நின்றவர் சோனியா காந்தியா, மன்மோகன் சிங்கா, அப்போதிருந்த வெளியுறவு அமைச்சரா, வெளியுறவுச் செயலாளரா? அந்த அசிங்கத்துக்கு யார் காரணமென்பது வெளியுறவுத் துறையில் பணிபுரிந்தவர்களுக்கு நிச்சயமாகத் தெரியும். ஆனால், அவர்களில் எவரும் அதைப் பற்றிப் பேசப் போவதில்லை. ஏ.பி.வெங்கடேஸ்வரன் மாதிரி நேர்மையாளர்கள் அந்தத் துறையில் இப்போது இருக்கிறார்களா என்ன?
கொழும்பு பல்கலைக் கழகம், 2009ல், மகிந்த ராஜபக்சவுக்கும் கோத்தபாய ராஜபக்சவுக்கும் கௌரவ டாக்டர் பட்டங்களை வழங்கியது. இந்த மிருகங்களுக்கு எதற்கு டாக்டர் பட்டம், புதுமாதிரியாக எதைக் கண்டுபிடித்துக் கிழித்திருக்கிறார்களா என்றெல்லாம் அப்போது யாரும் கேட்கவில்லை. (அரசை எதிர்த்துப் போரிடுபவர்களை வீழ்த்த வேண்டுமென்றால், அப்பாவிப் பொதுமக்களைக் குண்டுவீசிக் கொல்லவேண்டும் என்கிற போர் 'நெறி' கூட ராஜபக்ச சகோதரர்களின் கண்டுபிடிப்பில்லை... ரணிலின் மாமா ஜெயவர்ததன கண்டுபிடித்து, சந்திரிகா ஆன்டியால் 'டெவலப்' செய்யப்பட்ட போர்த் 'தந்திரம்' அது).
ராஜபக்ச சகோதரர்களுக்கு டாக்டர் பட்டம் கொடுக்கும் தீர்மானத்தைக் கொழும்பு பல்கலைக் கழக செனட்டில் முன்மொழிந்தவர், அரசியல் விஞ்ஞானத் துறையில் மூத்த பேராசிரியராக இருந்த - லக்சிறீ ஃபெர்னாண்டோ. 2009ல் தான் செய்த அந்தத் தவறுக்காக, இப்போது பகிரங்க மன்னிப்பு கேட்டிருக்கிறார் லக்சிறீ.
'கொழும்பு பல்கலைக் கழகத்தின் கௌரவத்தைக் காப்பாற்றுகிற விதத்தில், ராஜபக்சக்களுக்குக் கொடுத்த கௌரவ டாக்டர் பட்டங்களைத் திரும்பப் பெறவேண்டும்' - என்கிற யோசனையையும் முன்வைத்திருக்கிறார் லக்சிறீ. ('வெள்ளைக் கொடியோடு வந்தவர்களைக் கொன்றுகுவித்தது காட்டுமிராண்டித்தனம்' என்று வெளிப்படையாகக் கண்டித்திருப்பவரும் அவர்தான்!)
ஒரு பல்கலைக் கழகத்துக்குத் தன்னால் ஏற்பட்ட களங்கத்தைத் துடைக்க முன்வந்திருக்கிற லக்சிறீக்கு இருக்கிற மனசாட்சி கூட இந்தியாவுக்கு இல்லை. அப்படியொரு சமாசாரம் இந்தியாவுக்கு இருந்தால், "ராஜபக்சவுக்குக் கொடுத்த கௌரவங்களுக்காக மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்கிறோம்" என்று வெளிப்படையாக அறிவிக்க முடியாதா? 'மகிந்த மிருகத்துக்குக் கட்டிய பரிவட்டத்தைத் திரும்பப் பெறுகிறோம்' என்று திருப்பதி தேவஸ்தானம் அறிவிக்க முடியாதா?
லக்சிறீயின் கோரிக்கையை கொழும்பு பல்கலைக் கழகம் ஏற்குமா என்பது சந்தேகம். மின்சார நாற்காலியிலிருந்து மகிந்தனைக் காப்பாற்றுவதையே லட்சியமாகக் கொண்டிருக்கும் மைத்திரியும் ரணிலும் அதை விரும்பமாட்டார்கள் என்றே நினைக்கிறேன்.
தமிழர்களுக்கு எதிரான சிங்கள இனவெறியைத் தீனி போட்டு வளர்த்தவர், ஜே.ஆர். ஜயவர்தனா. இனப்படுகொலைகளின் பிதாமகன் அவர்தான்! 1983 இனப்படுகொலையால் தமிழர்கள் அனுபவித்த சொல்லொணாத் துயரங்களைப் பார்த்து, இலங்கையின் அதிபர் என்கிற முறையில் அகமகிழ்ந்தவர் அவர். 'டெய்லி டெலிகிராப்' பத்திரிகைக்குக் கொடுத்த பேட்டியில், 'தமிழர்களை நான் பட்டினி போட்டால், சிங்கள மக்கள் பெருமகிழ்ச்சி அடைவார்கள்' என்று 'பெருமிதத்தோடு' அறிவித்த அந்தக் கிழட்டு நரியின் முகம்தான், இன்றைக்கும் இலங்கையின் முகவரி.
தமிழர்களைப் பட்டினி போட்டால் சிங்கள மக்கள் மகிழ்வார்கள் - என்பதுதான் இலங்கைத் தீவின் யதார்த்தம். 2009ல், ராஜபக்சவின் இராணுவம் தமிழர்களை விரட்டி விரட்டிக் கொன்றதைப் பார்த்து, சிங்கள இனம் அகமகிழ்ந்தது. கதாநாயகன் என்று ராஜபக்சவைக் கொண்டாடியது. அந்தத் தமிழின அழிப்புக்காக, ராஜபக்சவுக்குத் தண்டனை கொடுத்தால், ரணிலையும் மைத்திரியையும் சிங்களச் சமூகம் பந்தாடி விடும்.
இனத் துவேஷத்திலேயே ஊறிய இனம் பௌத்த சிங்கள இனம். ஈழத் தமிழினம் இதற்கு நேரெதிர். ஈழத் தமிழினத்துக்கும் இனத் துவேஷத்துக்கும் காத தூரம். சேர்ந்தே வாழ்வோம் என்று சாத்விகம் பேசிய சமூகம் அது. இப்போதுதான், தனக்குத்தானே நியாயம் தேட முயற்சிக்கிறது.
ஜெனிவாவில் அரங்கேறிய துரோகம் குறித்து கவலைப்படுவதைக் காட்டிலும், மேலதிக நம்பிக்கையுடன் நமக்கான நீதியைப் பெற தொடர்ந்து போராட வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம். சோர்தல் இல்லாத ஓர்மம்தான் இப்போதைய தேவை. நவநீதம் பிள்ளையின் இடத்தில் இருக்கிற செயித் அல் ராத் ஹுசெய்ன் போன்றோரை நம்பி, அடுத்த கட்டத்துக்கு நாம் தயாராக வேண்டியிருக்கிறது.
இலங்கை தன்னைத்தானே விசாரித்துக் கொள்வதென்பது கேலிக்கூத்து என்பதை உணர்த்தவே, 'காணாமல் போனோர் தொடர்பான இலங்கை ஜனாதிபதி ஆணையத்தின் செயல்பாடு நம்பகத்தன்மையற்றது... அதைக் கலைத்துவிட வேண்டும்' என்று ஹுசெய்ன் கூறியிருந்தார். அவர் அப்படிச் சொன்ன பத்தே நாளில், அந்த ஆணையம் கலைக்கப்படுவதாக இலங்கை அரசு அறிவித்திருப்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். நம்பிக்கை நார் மட்டும் நம் கையிலிருந்தால் உதிர்ந்த மலர்கள் கூட ஒவ்வொன்றாய் வந்து ஒட்டிக் கொள்ளும்!
ஒன்றை நாம் மறந்துவிடக் கூடாது. நவநீதம்பிள்ளையும் ஹுசெய்னும் ஒளிவு மறைவாகப் பேசவில்லை.... இலங்கை செய்திருப்பது சர்வதேசக் குற்றம் என்று வெளிப்படையாகச் சொல்கிறார்கள்.
'நாற்பதாயிரம் பேர் கொல்லப்பட்டது எப்படி உள்நாட்டு விவகாரமாக இருக்க முடியும் என்று கேட்கிற பிள்ளையின் குரல்தான் உலகெங்கும் எதிரொலிக்கும்....! கொலைகாரர்களுடன் சேர்ந்துதான் நாங்கள் வாழவேண்டுமா என்கிற எமது இளையோரின் கேள்விக்கு அதுதான் பதிலளிக்கும்!
புகழேந்தி தங்கராஜ்

0 Responses to கோத்தாவின் ஒப்புதல் வாக்குமூலம்! - புகழேந்தி தங்கராஜ்