நைஜீரியாவின் போர்னோ மாகாணத்தின் தலைநகரான மைடூகுரியின் மோலாய் பகுதியிலுள்ள பள்ளிவாசலொன்றில் இன்று வெள்ளிக்கிழமை தற்கொலைப்படை நிகழ்த்திய தாக்குதலில் 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மோலாய் பகுதி பள்ளிவாசலுக்குள் உடலில் வெடிபொருட்களுடன் வந்த இருவர் வெடிகுண்டுகளை வெடிக்கசெய்ததிலேயே 14 பேர் பலியாகினர். இந்த வெடி குண்டு தாக்குதலில் பள்ளிவாசல் முற்றிலும் இடிந்து சேதமானது.
இந்த சம்பவத்தில் காயம் அடைந்தவர்கள் அருகாமையில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். சம்பவம் குறித்து அறிந்ததும் விரைந்து வந்த பொலிஸார் சம்பவ இடத்தை சுற்றிலும் பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தி விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த வாரத்தில் அங்கு நடைபெறும் இரண்டாவது தாக்குதல் இதுவாகும். இந்த தாக்குதலுக்கு பொக்கோ- ஹராம் தீவிரவாதிகள் இயக்கம் மீது குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது.




0 Responses to நைஜீரியா மைடூரி மேலாய் பகுதியில் தற்கொலைத் தாக்குதல்; 14 பேர் பலி!